• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொள்ளையடித்த பணத்தில் ஃபேஷியலுக்கு ரூ.92000, விக்குக்கு ரூ.1.5 லட்சம்..வசமாக சிக்கிய ஓல்டு கொள்ளையன்

Google Oneindia Tamil News

சென்னை: சேத்துப்பட்டில் தனியார் நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 57 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்த பின்னரும் அசராத அந்த முதியவர், "என்ன சார் அதுக்குள்ளார பிடிச்சுட்டீங்க... விக் ஆர்டர் பண்ணியிருந்தேன் அதுக்குள்ளார பிடிச்சுட்டீங்களே" என்று கூறி போலீஸை மிரள வைத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த தொழிலதிபர் ஆசிஷ் பன்சால் என்பவர் கார் பேட்டரிகளுக்கு அமிலங்கள் தயாரிக்கும் pondy oxides and chemicals ltd என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 4ஆவது மாடியில் அமைந்துள்ளது.

அட.. தமிழகத்தில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா?.. ஆச்சரியத்தில் மதுபிரியர்கள்.. எதுக்கு தெரியுமா? அட.. தமிழகத்தில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா?.. ஆச்சரியத்தில் மதுபிரியர்கள்.. எதுக்கு தெரியுமா?

கொள்ளை சம்பவம்

கொள்ளை சம்பவம்

கடந்த வாரம் திங்கள்கிழமை காலையில் நிறுவனத்தின் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது ஆபிஸ் கதவுகளும் லாக்கர்களும் உடைக்கப்பட்டு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ம் அதிலிருந்த ரூபாய் 72 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

சொகுசு விடுதி

சொகுசு விடுதி

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்குச் சென்று சுற்றி வளைத்து அறைக்குள் நுழைந்த போது போலீசாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே டிப்டாப் உடை அணிந்து இருந்தது 57 வயது மதிக்கத்தக்க நபர். இருப்பினும், சிசிடிவி காட்சியில் இருந்தது அந்த நபர் தான் என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

யாருப்பா நீ

யாருப்பா நீ

அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த டிப்டாப் ஆசாமி, திருநெல்வேலி மாவட்டம் பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான பாண்டுரங்கன் என்பது தெரிய வந்தது. 1990 ஆம் ஆண்டிலிருந்தே சென்னையில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர், நகரின் பிரதான கொள்ளையனாக இருந்துள்ளார். இவர் மீது சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் 21 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளனர். மேலும்,1992இல் எழும்பூர் போலீசார் இந்த ஆசாமியைக் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்துள்ளனர்.

போர் அடித்ததால் கொள்ளை

போர் அடித்ததால் கொள்ளை

அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த பாண்டுரங்கன், 2001ஆம் ஆண்டு சென்னையை விட்டு வெளியேறினார். தமிழகத்தில் பிற மாவட்டங்களில் சிறு சிறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த ஆசாமி மீண்டும் கடந்த மாதம் சென்னை வந்துள்ளார். அதற்கு இவர் கூறிய காரணம் ஷாக் கொடுத்தது. அதாவது சிறு சிறு கொள்ளை சம்பவங்களால் போர் அடித்து விட்டதாகவும் ஒரே சம்பவம் மிகப் பெரிய சம்பவமாகச் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே இவர் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார்.

கொள்கை உடன் கொள்ளை

கொள்கை உடன் கொள்ளை

சென்னை வந்த பாண்டுரங்கன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். பிறகு எங்குக் கொள்ளை அடிக்கலாம் என்பதை மேப் போட்டுத் தேடியுள்ளார். வீடுகளில் கொள்ளை அடிப்பது பாவம் என்ற கொள்கையை இவர் வைத்துள்ளதால் தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலகங்களை நோட்டமிட்டு வந்துள்ளார். அப்படி தான் சேத்துப்பட்டில் உள்ள pondy oxides and chemicals ltd நிறுவனத்தை நோட்டமிட்ட பாண்டுரங்கன், கொள்ளை அடிக்க சிறந்த இடம் என இதை பிக்ஸ் செய்து கொண்டார்,

குப்பை கொட்டும் பையில் ரூ 72 லட்சம்

குப்பை கொட்டும் பையில் ரூ 72 லட்சம்

அதற்கு மறுநாளே (அக். 9) பாண்டுரங்கன் நிறுவனத்திற்குள் சென்று கமுக்கமாக மறைந்து கொண்டார். அனைவரும் அலுவலகத்தைப் பூட்டிச் சென்ற பின், ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியே வந்த அவர், தன்னிடம் இருந்த சுத்தியல் மற்றும் திருப்புளியாலை கொண்டு லாக்கரை உடைத்து ரூபாய் 72 லட்சம் பணத்தைக் கொள்ளை அடித்துள்ளார். அதுவும் யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகக் குப்பை கொட்டும் பாலத்தின் பையில் ரூபாய் 72 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

யூத் ஆக முயற்சி

யூத் ஆக முயற்சி

கொள்ளை அடித்ததும் தான் தங்கி இருந்த லாட்ஜ் பாண்டுரங்கனுக்கு சிறிதாகத் தோன்றியது போல..! அதை காலி செய்துவிட்டு நேராக தி நகரில் உள்ள சொகுசு விடுதியில் ரூம் போட்டுள்ளார். அங்கு கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு விலை உயர்ந்த உணவு, மதுபானங்கள் என 3 நாட்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் இந்த பாண்டுரங்கன். இதை மட்டுமில்லாமல் அங்குள்ள பிரபல அழகு நிலையத்திற்குச் சென்று 92,000 ரூபாய் கொடுத்து ஃபேசியல் செய்து யூத் ஆக மாற முயன்றுள்ளார் இந்த ஓல்ட் கொள்ளையர்.

வழுக்கையை மறைக்க விக்

வழுக்கையை மறைக்க விக்

மேலும், மண்டையில் இருக்கும் வழுக்கையை மறைக்க 1.2 லட்ச ரூபாயில் விக் ஒன்ரையும் ஆர்டர் கொடுத்துள்ளார். தனது சொகுசு வாழ்க்கைக்காக வெறும் 3 நாட்களில் மட்டும் ரூ.5.50 லட்சத்தை தண்ணீர் போல செலவழித்துள்ளார். இதை எல்லாம்விட கொடுமை கொள்ளை அடித்த பணத்தில் ரூ 55 லட்சத்திற்கு ஈ.சி.ஆரில் வீட்டை வாங்கவும் பேரம் பேசி வைத்துள்ளார் பாண்டுரங்கன். போலீசார் கைது செய்த பின்னரும் கூட சற்றும் பதறாத பாண்டுரங்கன், ஒரு நாள் நீங்க லேட்டா வந்திருந்தால் நான் என வாழ்க்கை லட்சியத்தையே அடைந்திருப்பேன் என்று கூறி அடுத்த ஷாக் கொடுத்தார்.

மிரண்ட போலீஸ்

மிரண்ட போலீஸ்

அதாவது கைது செய்யப்பட்ட அன்றைய தினம் தப்பிச் செல்ல சூப்பர் பிளான் போட்டுள்ளார். "ஒரு நாள் முன்னாடி வந்து அவசரப்பட்டு என்ன புடிச்சிட்டீங்களே சார். விக் கூட நாளைக்குத் தான் வருது" என போலீசாரிடமே பீல் செய்துள்ளார் பாண்டுரங்கன்! அவரிடம் இருந்து ரூபாய் 60 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 6 லட்சம் பணத்தை முடக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பாண்டுரங்கனிடம் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
Chennai Chetpet robbery case latest updates. Chennai crime news latest updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X