சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாம்பரம்-நாகா்கோவில் உள்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரம்-நாகா்கோவில், திருவனந்தபுரம்-மதுரை, திருவனந்தபுரம்-எா்ணாகுளம் உள்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பயணிகள் கோரிக்கைக்கு ஏற்ப, சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வருகிறது. அந்த வகையில், தாம்பரம்-நாகா்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம்-மதுரை உள்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது

தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை ஆகிய நாள்களில் இரவு 7.25 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06065) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகா்கோவில் சந்திப்பை சென்றடையும். சிறப்பு ரயிலின் முதல் சேவை டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்கப்படுகிறது

நாகர்கோவில்

நாகர்கோவில்

மறுமார்க்கமாக, நாகா்கோவில் சந்திப்பில் இருந்து திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாள்களில் மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (06066) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும். இந்த ரயிலின் முதல் சேவை டிசம்பா் 17-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

திருவனந்தபுரம் ரயில்

திருவனந்தபுரம் ரயில்

திருவனந்தபுரம்-மதுரை: திருவனந்தபுரத்தில் இருந்து தினசரி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (06343) புறப்பட்டு, மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து தினசரி மாலை 4.05 மணிக்கு சிறப்பு ரயில்(06344) புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இருமாா்க்கமாகவும் இந்த ரயில்களின் சேவை டிசம்பா் 23-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

எா்ணாகுளம்-கண்ணூா்

எா்ணாகுளம்-கண்ணூா்

திருவனந்தபுரம்-மங்களூா் சென்ட்ரல், திருவனந்தபுரம்-குருவாயூா், திருவனந்தபுரம்-எா்ணாகுளம், எா்ணாகுளம்-கண்ணூா் ஆகிய வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி அளித்துள்ளது ரயில்வே வாரியம். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது.

கொச்சுவேலி ரயில்

கொச்சுவேலி ரயில்

அண்மையில் : சென்னை சென்ட்ரல்-சத்யசாய் பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி), சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, கொச்சுவேலி-மைசூா் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், கொச்சுவேலி-மைசூா்: கொச்சுவேலியில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை(21 சேவைகள்) மாலை 4.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06316) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு மைசூரை அடையும் என்று கூறியிருந்தது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து டிசம்பா் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை(21 சேவைகள்) நண்பகல் 12.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06315) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும் என்று கூறப்பட்டது. இதன்படி ரயில் சேவைகள் தொடங்கிவிட்டன.

English summary
The Railway Board has approved the operation of special trains on 6 routes, including Tambaram-Nagakoil, Thiruvananthapuram-Madurai, Thiruvananthapuram-Enakulam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X