சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு அதிரடி.. 61 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: மாநிலம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 61 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ள நிலையில், 61 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

61 IPS officers transferred in Tamil Nadu.. Home Secretary of Tamil Nadu ordered

இதில் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் மாத்தூருக்கு ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு வழங்கியுள்ள தமிழக அரசு அவரை அயல் பணிக்கு மாற்றியுள்ளது.

துணை ஆணையர் பி.அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஆர்.பொன்னி, ஊழல் கண்காணிப்பு துறை எஸ்.பி-யாக தலைநகர் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.கே.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி நகர துணை ஆணையராக எஸ்.சரவணன், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரோஹித் நாதன் ராஜகோபால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் பாலகோபாலன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.ஸ்ரீ அபினவ், காஞ்சிபுரம் மாவட்டம் டி.எஸ்.பி-யாக டிகண்ணன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகப்பரியா, சென்னை சைபர் குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை துணை ஆணையர் சாம்சன் சென்னை சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

English summary
The Tamil Nadu Government has issued an Action Directive to transfer IPS officers across the state. Home Secretary Niranjan Marty has ordered 61 IPS officers to be transferred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X