சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62305 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது தோராயமாக 10ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் டெஸ்டிங் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் பாதிப்பும் அதிகமாக தெரிய ஆரம்பித்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் டெஸ்டிங் மிக அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாக பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்

எவ்வளவு பரிசோதனை

எவ்வளவு பரிசோதனை

இதனால் பரிசோதனை எண்ணிக்கை தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 62305 பேருக்கு 64129 பரிசோதனைகள் நடத்தப்பட்டுளளது.இதுவரை தமிழகத்தில் 22,62,738 பேருக்கு 2351463 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2,13,723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 10ல் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையிலும் 10ல் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு குணம்

எவ்வளவு குணம்

தமிழகத்தில் பரிசோதனை அதிகரிப்பதை போல் குணம் அடைவோர் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5471 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 156526 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,703 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13744 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 3771 பேரும், செங்கல்பட்டில் 3141 பேரும், காஞ்சிபுரத்தில் 2640 பேரும், விருதுநகரில் 2612 பேரும், தூத்துக்குடியில் 2314 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பரிசோதனை விறுவிறு

பரிசோதனை விறுவிறு

தமிழக அரசு பரிசோதனையை அதிகப்படுத்தி வருவதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா உச்சத்தை தொட்டு வந்துள்ள நிலையிலும் , ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நிலையான அளவிலேயே உள்ளது. எனவே விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. சிகிச்சை முறையும் சிறப்பாக உள்ளதால் குணம் அடைவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.

English summary
64,129 samples tested today in tamilnadu, 5,471 discharged today in tamilnadu, list released by health department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X