• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

67 வயசுல 28 வயசு பொண்ணு தேவையா.. ஆனால் இதை பற்றி கவலைப்பட வேண்டியது சுந்தரேசன் மனைவிதான்!

|

சென்னை: 67 வயசு தாத்தாவுக்கு 28 வயசு பொண்ணு தேவையா? என்ற அதிர்ச்சி கேள்விகள் 2 நாட்களாக இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன!

திருவண்ணாமலையை அடுத்த சாவல்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன்... 67 வயசாகிறது.. 30 வருஷங்களுக்கு மேலாக திமுகவில் இருப்பவர்.. திமுக ஒன்றிய செயலர், மாவட்ட பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார்.. இப்போதைக்கு மாவட்ட துணை செயலராக உள்ளார்.

6 முறை சாவல்பூண்டி ஊராட்சி தலைவராகவும் தேர்வாகியிருக்கிறார்... சிறந்த பேச்சாளரும்கூட..இவர் பல பேச்சாளர்களையும் உருவாக்கியவர்.. தற்போதும் உருவாக்கி வருகிறார்.. திமுகவின் தீவிர விசுவாசியும், செயற்பாட்டாளரும் என்பதால், இவர் ரொம்ப ஃபேமஸ் ஆனவராம்.. இப்படிப்பட்டவர்தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சென்னை.. சுவர் விளம்பரத்திற்காக திமுக-பாஜகவினர் அடிதடி.. திமுக வட்டச் செயலாளர் சிறையிலடைப்பு

 திருவண்ணாமலை

திருவண்ணாமலை

இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அபிதா என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார்.. அவருக்கு வயசு 28.. திருவண்ணாமலையை சேர்ந்தவர்.. பட்டதாரி பெண்.. திருவண்ணாமலையிலுள்ள கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தவராம்.. அவரும் சிறந்த பேச்சாளராம்!

காதல்

காதல்

'சாவல்பூண்டி சங்கப்பலகை' என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் பட்டிமன்ற பேச்சாளராக தன் சுந்தரேசனுக்கு அறிமுகமாகி உள்ளார்.. இவர்கள் பழகியே சில வருஷம்தான் ஆகிறதாம்.. உடனே காதல் வந்துவிட்டது.. 3 வருஷமாக காதலித்து, ரகசியமாக குடும்பமும் நடத்தி வந்திருக்கிறார்கள். பேரப்பிள்ளைகளை வைத்து கொண்டு, இவ்வளவு வயதில் சிறியவரை எப்படி திருமணம் செய்யலாம் என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

 பேரப்பிள்ளைகள்

பேரப்பிள்ளைகள்

இதில் சுந்தரேசனுக்கு ஏற்கனவே மனைவி, மகன், மகள், பேரப்பிள்ளைகள் என சகலமும் உள்ளனர்.. அபிதா இதை பற்றி சுந்தரேசன் சொல்லும்போது, "நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது உண்மைதான்... ஏற்கெனவே, பொதுவெளியில் இந்த விவகாரம் பேசப்பட்டுவருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்.

 கருணாநிதி

கருணாநிதி

வயதான காலத்தில் தன் உதவிக்கு ஒருவர் தேவை என, பெரியார், மணியம்மையை திருமணம் செய்தார். திமுக தலைவர் கருணாநிதியும் அப்படிதான்... என் மனைவி மற்றும் அபிதாவின் பெற்றோர் தரப்பில் சம்மதம் பெற்று திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். இரு மனைவியர்களுடன் அருகருகே தனித்தனியாக வசித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 கேலி, கிண்டல்கள்

கேலி, கிண்டல்கள்

எனினும் 40 வயசு குறைந்த பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்று தொடர்ந்து கேலி, கிண்டல்கள் எழுந்து வருகின்றன.. ஒருவகையில் சுந்தரேசன் சொல்வதிலும் நியாயம் உள்ளது.. தனக்காக யாரும் இல்லையே என்ற ஆதங்கம் ஒருசிலருக்கு ஏற்படுவது இயல்புதான்.. தனது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள, தனது உள்ளார்ந்த உணர்வுகளையும், அடியாழத்தில் புதைந்துபோன அந்தரங்கங்களையும் பகிர்ந்துகொள்ள ஒரு உயிர்தோழி தேவைப்படுகிறார்.

வாழ்க்கை

வாழ்க்கை

அந்தவகையில் ஒரு பெண்ணை விரும்பி சுந்தரேசன் மணம் முடித்துள்ளார்.. அந்த பெண்ணின் விருப்பத்திதன் பேரிலேயே இந்த கல்யாணம் நடந்துள்ளதே தவிர, அவரை ஏமாற்றி வாழ்க்கையை சீரழிக்கவில்லை.. தான் கல்யாணம் செய்ததை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். எத்தனையோ பேர், திருட்டுத்தனமாக 2, 3 பெண்களிடம் குடும்பம் நடத்தி வரும் நிலையில், சுந்தரேசனின் வெளிப்படை பேச்சு வரவேற்க கூடியதே.

 தனிப்பட்ட உரிமை

தனிப்பட்ட உரிமை

அதுமட்டுமல்ல, ஒருவர் இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்வதும், கொள்ளாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை... இதில் யாருக்கும் தலையிடும் அதிகாரம் கிடையாது... 70 வயதான யாசர் அராபத்தும், 80 வயதான நெல்சன் மண்டேலாவும், பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் தன்னையும்விட மிகவும் வயது குறைந்த பெண்களைத்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.. இவர்களை மக்களும் மனப்பூர்வமாக வரவேற்று அங்கீகரித்தனர்.

இணையவாசிகள்

இணையவாசிகள்

அதனால், இது சம்பந்தமாக கவலைப்படக்கூடியது சுந்தரேசன் மனைவிதான்.. அது அவரது பிரச்சனை.. அவர்கள் குடும்ப விவகாரம்.. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்து வைத்து கொண்டு பொதுவெளியில் பேசியும், கிண்டலடிப்பதையும் விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான வேலைகளில் இணையவாசிகள் தங்கள் கவனத்தை செலுத்தினால் நன்றாக இருக்கும் என்றே சொல்ல தோன்றுகிறது!

 
 
 
English summary
67 year old DMK man marries 28 year old girl creates debate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X