சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு சட்டம் - அரசிதழில் வெளியீடு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தார். இதனால் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா சட்டமானது.

7.5% Internal Allocation Act for Government School Students in Medical Studies release in Gazette

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 18ம் தேதிக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்து நீலகிரி பேசிய முதல்வர் பழனிசாமி, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

7.5% Internal Allocation Act for Government School Students in Medical Studies release in Gazette

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

English summary
The law providing for 7.5% internal quota for government school students in medical studies has been published in the Gazette today. The Government of Tamil Nadu has taken this step following the passage of the 7.5% Internal Reservation Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X