சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கல்விக்கொள்கை 2020: அரசுக்கு பரிந்துரை வழங்க அபூர்வா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு - அரசாணை

புதிய கல்விக்கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு உயர்மட்டக்குழு அம

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கல்விக்கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட பிரபல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    NEP 2020 | PM Modi On New National Education Policy |Oneindia Tamil

    புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் அதில் கூறப்பட்டு இருந்த மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருமொழி கொள்கை தான் தொடர்ந்து பின்பற்றப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    7 member panel to make recommendations on new education policy - Government of Tamil Nadu

    புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது புதிய தேசிய கல்விக்கொள்கையில் உயர்கல்வியில் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள், பரிந்துரைகளை அரசுக்கு வழங்க 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா அரசாணை வெளியிட்டுள்ளார்.
    அதில் தரமான பல்கலைக்கழகங்கள், முழுமையான கல்வி, உகந்த கற்றல் சூழல்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவது, திறமையான ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வழங்குவது, உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆசிரியர் கல்வியை மறுசீரமைத்தல், உயர்தர ஆராய்ச்சியை ஊக்குவித்தல், உயர்கல்வியின் ஒழுங்குமுறையை மாற்றுவது போன்ற நோக்கில் புதிய தேசிய கல்விக்கொள்கை - 2020 ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    இந்த நிலையில் இந்த கல்விக்கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது.

    "மாஸ்டர்" எடப்பாடி.. தனித்து போட்டியிடுமா அதிமுக.. பாஜகவை கழற்றி விடுமா.. ஓ.பி.எஸ். என்ன செய்வார்?

    அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இந்தக்குழு கொள்கை வழியாக சென்று தமிழக அரசாங்கத்துக்கு சாத்தியமான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    English summary
    The Government of Tamil Nadu has announced that a High Level Committee headed by the Principal Secretary, Higher Education, Apurva, has been set up to provide the Government with ideas and recommendations that can be accepted by the Government of Tamil Nadu from the new education policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X