• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மஞ்சள் சேலை, ஹேண்ட்பேக், கர்ப்பிணி லுக்.. 7 மாத பிஞ்சுவை அசால்ட்டாக கடத்திய பெண்..சென்னை போலீஸ் வலை

|
  ஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்திய பெண் - வீடியோ

  சென்னை: "சினிமா ஷூட்டிங்குக்கு உங்க குழந்தை வேணும்.. எவ்வளவு பணம் வேணும்னாலும் தருவாங்க.. நான் கியாரண்ட்டி" என்று ஆசைகாட்டி 7 மாத ஆண் குழந்தையை கடத்தி உள்ளார் இளம்பெண் ஒருவர்! குழந்தையை நூதனமாக கடத்தி செல்லும் இந்த இளம் பெண்ணை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருவதுடன், இதற்கான ஒத்துழைப்பை தரும்படியும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஜானி போஸ்லே.. இவரது மனைவி ரந்தேஷா போஸ்லே.. வயது 20 ஆகிறது.. மாமியார் அர்ச்சனா என்பவருடன் சென்னை மெரினா பீச்சில் கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடற்கரை மணலில் வசித்து வருகிறார்.

  காந்தி சிலை பின்புறத்தில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 மாதத்தில் ஜான் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

  பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த பயங்கரம்.. சிதறி கிடந்த தோட்டாக்கள்.. உபியில் பயங்கரம்

   கர்ப்பிணி தோற்றம்

  கர்ப்பிணி தோற்றம்

  கடந்த 12-ம் தேதி இரவு 11.30 மணி இருக்கும்.. 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு வந்தார்.. கர்ப்பிணி போல தெரிந்தார்.. தாய் ரந்தேஷா போஸ்லாவிடம் தானாகவே வலிய வந்து பேச்சு தந்தார். "நாங்க ஒரு சினிமா படம் எடுக்கிறோம்.. அதில் நடிக்க ஒரு ஆண் குழந்தை தேவைப்படுகிறது. நிறைய பணம் கிடைக்கும்" என்று ஆசைவார்த்தை சொல்லி உள்ளார்.

   ஆட்டோ

  ஆட்டோ

  பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பெற்றோரும் அதற்கு சம்மதித்துள்ளனர்.. உடனே ஜானின் தாய் ரன்தீசாவையும், அவரது மாமியாரையும் ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கும், பிறகு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும் அந்த பெண் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். "குழந்தையை முதலில் டாக்டரிடம் காட்டிவிட்டு வருகிறேன்.. ஒரு ஓரமாக இப்படி நில்லுங்கள்" என்று சொல்லிவிட்டு, ஜானை தூக்கி கொண்டு போனார்.

   அதிர்ச்சி

  அதிர்ச்சி

  ரொம்ப நேரம் ஆகியும் அந்த பெண்ணை காணவில்லை.. இதனால் குழந்தையின் அம்மாவும் பாட்டியும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் ஷ்டேஷனில் புகார் செய்தனர். போலீஸாரும் விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.. அப்போது சம்பந்தப்பட்ட அந்த மர்ம பெண்ணை அடையாளம் கண்டறித்துள்ளனர்.

   மஞ்சள் நிற சேலை

  மஞ்சள் நிற சேலை

  அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண், மஞ்சள் நிற சேலை அணிந்துள்ளார்.. தோளில் ஹேண்ட் பேக் மாட்டியுள்ளார்.. குழந்தையை இடுப்பில் வைத்துகொண்டு, ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்து செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது... இவர் யார் என்று தெரியவில்லை. இவரை தேடும் முயற்சியில் சென்னை நகர போலீசார் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

   தொலைபேசி எண்கள்

  தொலைபேசி எண்கள்

  குழந்தையை கடத்திய இந்த சிசிடிவி வீடியோவை வெளியிட்டதுடன், பெண்ணை பற்றின தகவல் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளும்படி தொலைபேசி எண்களையும் போலீசார் பகிர்ந்துள்ளனர்.

  தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

  காவல்கட்டுப்பாட்டு அறை 044-23452361

  பூக்கடை காவ நிலைய ஆய்வாளர் 9003095550

  அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை காவல் நிலையம் 04423452473

  உதவி ஆய்வாளர் = 7904250724,, 9498141297, 8122019987

   
   
   
  English summary
  20 year old woman kidnaped 7 month male baby in chennai gov hospital
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X