சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த "அறிவாலயம்"! ஸ்டாலின் அனுப்பிய "பிக்" மெசேஜ்! அதிரும் அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. 72 அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கான லிஸ்ட் நேற்று வெளியானது.

திமுக உட்கட்சி தேர்தல் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள்.

ஒரே பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டால், அவர்கள் இடையே பேசி சமாதானம் செய்து, ஒருவரை விட்டுக்கொடுக்க வைத்து வருகின்றனர்.

இதனால் 95 சதவிகித பதவிகள் இதுவரை தேர்தல் இன்று நிரப்பப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் பதவிக்கும் இதேபோல்தான் தேர்தல் நடைபெற்று உள்ளது.

திமுகவில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. 7 பேர் மாற்றம்.. 64 பேர் ஒருமனதாக தேர்வு.. முழு பட்டியல் திமுகவில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. 7 பேர் மாற்றம்.. 64 பேர் ஒருமனதாக தேர்வு.. முழு பட்டியல்

 மாவட்ட செயலாளர்

மாவட்ட செயலாளர்

மொத்தமாக மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. அதில் தற்போது மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட்தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வந்தன. 72 மாவட்டங்களில் மொத்தம் 45 மாவட்டங்கள் போக 27 மாவட்டங்களில் பலர் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்டனர்.

போட்டி

போட்டி

அதாவது ஒரே பதவிக்கு 2-3 பேர் போட்டியிட்டனர். ஆனால் இதில் சிலரை முன்மொழிய ஆட்களே இல்லை. இன்னும் சிலர் கட்சியில் பிரபலம் இல்லாத ஆட்கள். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேட்புமனு வாபஸ் வாங்கப்பட்டது. இதன் காரணமாக எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் போட்டியின்றி நடத்தப்பட்டது. இதில்தான் மொத்தம் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதன் மூலம் பெரிய அளவில் மோதல் இன்றி அமைதியாக திமுக தேர்தல் நடத்தி முடித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மாற்று கட்சியில் இருந்து முன்பு திமுகவிற்கு வந்தவர்கள், சமீபத்தில் திமுகவிற்கு வந்தவர்களுக்கு கூட கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது

மாற்று கட்சியினர்

மாற்று கட்சியினர்

கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசன் மாவட்ட செயலாளர் ஆகியுள்ளார். இவர் தேமுதிக, காங்கிரசில் இருந்து திமுக வந்தவர். கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவி மாவட்ட செயலாளர் ஆகியுள்ளார். இவர் திமுகவில் இருந்து மதிமுக சென்று பின்னர் திமுக வந்துள்ளார். இவர்கள் இருவரும் மாற்று கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்தவர்கள். அதேபோல் பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகன். இவர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி ஆவார்.

பதவி

பதவி

திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி தேடி வந்துள்ளது. இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். செங்குட்டுவனுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அமமுகவிலிருந்து வந்த பழனியப்பன் , தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இப்படி மாற்று கட்சியினர், மாற்று அமைப்பினர் திமுகவில் வாய்ப்பு பெற்றுள்ளனர். மொத்தமாக நியமிக்கப்பட்ட 72 பேரில் 7 பேர் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆவர். இதில் கோவையில் மட்டும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மெசேஜ்

மெசேஜ்

இது எதிர் தரப்பு அதிமுக நிர்வாகிகளுக்கு அனுப்பிய மெசேஜாகவும் பார்க்கப்படுகிறது. எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள். உங்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். கட்சியில் மரியாதை கிடைக்கும் என்று அதிமுக தரப்பில் உள்ள அதிருப்தி தலைகளுக்கு அனுப்பிய மெசேஜாக பார்க்கப்படுகிறது. எங்கள் கட்சிக்கு வந்தால் நல்ல பதவி கிடைக்கும். மா. செ தேர்தல் முடிந்துவிட்டது. இனி அந்த பதவி கிடைக்காது. ஆனாலும் மற்ற முக்கிய பதவிகள் திமுக வந்தால் கிடைக்கும் என்று திமுக சொல்லாமல் சொல்லி இருப்பதாக கூறுகிறார்கள்.

 அதிமுக அதிருகிறது

அதிமுக அதிருகிறது

அதுமட்டுமின்றி தற்போது புதிதாக கட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆகி உள்ள மாற்று கட்சியினர்.. தங்களின் பழைய கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை திமுக பக்கம் இழுக்க வேண்டும் என்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் பலர் உட்கட்சி மோதலால் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அதிமுகவில் அடுத்து எந்த நிர்வாகி திமுக பக்கம் சாய்வார்கள் என்ற பரபரப்பு நிர்வாகிகள் இடையே தொற்றிக்கொண்டு உள்ளது.

English summary
72 - 45 -7: The DMK formula helped to close the inside election smoothly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X