சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 724 பேருக்கு கொரோனா பாதிப்பு,10 பேர் மரணம்

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 724 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் இன்று உயிரிழந்துள்ளார். இவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் 5 பேர் அரசு மருத்துவமனையிலும் மரணமடைந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 724 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 430 பேர் ஆண்கள், 294 பேர் பெண்கள் ஆவர்.

 724 people were affected by corona and 10 died In Tamil Nadu

மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,30,516 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 743 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,85,946 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 10 பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 5பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,529 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 8041 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 314 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்றைய தினம் 1,02,068 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரைக்கும் 5,47,83,973 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 131 பேருக்கும் கோவையில் 124 பேருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. திருப்பூரில் 65 பேரும், ஈரோட்டில் 59 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 35484 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தான் 314 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அதில் 12 ஆய்வகங்களில் மரபணு சோதனை செய்யப்படுகிறது. டெல்டா வைரஸ் இன்னும் போகவில்லை. அது தான் தற்போது அதிகரித்து வருகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை இருந்தாலும் மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா மட்டுமே.. ஓமிக்ரான் வதந்தி.. சுகாதார துறை செயலாளர்வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா மட்டுமே.. ஓமிக்ரான் வதந்தி.. சுகாதார துறை செயலாளர்

English summary
In Tamil Nadu today, 724 people have been newly infected with corona in a single day. Ten people died today after being treated at a hospital for corona infection. Five of them died at a private hospital and five at a government hospital, according to the state health ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X