• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி.. 8 வயது சிறுவன் செய்த செயல்.. கலெக்டர் பாராட்டு.. வியந்த மணப்பாறை!

Google Oneindia Tamil News

சென்னை: மணப்பாறையில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை 8 வயது சிறுவன் குதித்து காப்பாற்றினான். அவனுக்கு கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்.

மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன். இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மனைவி குணா(29), தனது குழந்தைகள் லித்திகா(8) மற்றும் நிதர்சன்(7) ஆகியோருடன் அப்பகுதியில் புதன்கிழமை மாலை விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

காப்பற்றிய சிறுவன்

காப்பற்றிய சிறுவன்

பின்னர் அருகில் இருந்த கிணற்றில் குளிக்க சென்ற நிலையில், சிறுமி லித்திகா கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட அருகில் இருந்த 8 வயது சிறுவன் லோஹித், சற்றும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து லித்திகாவை மீட்டெடுத்து வந்துள்ளான், அதே சமயம் குணாவை காப்பாற்ற தண்ணீரில் குதித்த மற்றோரு சிறுவனையும் காப்பாற்றிய லோஹித், குணாவை கரைக்கு இழுத்து வர முடியவில்லையாம். இதனால் குணா நீரில் மூழ்கினார். அக்கம்பக்கத்தினர் கிணற்றிலிருந்து குணாவை சடலமாக தான் மீட்க முடிந்தது.

மக்கள் பாராட்டு

மக்கள் பாராட்டு

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குணா உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே பகுதியில் வசித்து வரும் சந்திரசேகர் - தங்கம்மாள் இரண்டாவது மகனாவார் லோஹித். லோஹித் துலுக்கம்பட்டி அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டு குவிந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு சிறுவனை நேரில் அழைத்து ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இன்றயை கிரைம் தொகுப்புகள்

இன்றயை கிரைம் தொகுப்புகள்

இது தவிர தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் முக்கியமான சம்பவங்களை சிறு தொகுப்புகளாக காணலாம். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள போழக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 15 வயதுடைய பிரியதர்ஷினி. இவரும் பூந்தோட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் போழகுடி அருகே வயல் கரையில் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இருவரையும் கண்டித்து தவறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை

தற்கொலை

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டுக்கு சென்று மண்ணென்னை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். முன்னதாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் போழக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், ஜான், புலிகுட்டி, முருகன்,ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவலாளி

காவலாளி

ஆவடி ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் புருசோத்தமன் (48). இவர் ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு புருசோத்தமன் வளாகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வசிக்கும் ஒரு இளம் பெண், இரு வாலிபர்கள், ஒரு பெண் தோழியுடன் மதுபோதையில் வளாகத்துக்குள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இரும்பு பைப்பால் தாக்குதல்

இரும்பு பைப்பால் தாக்குதல்

இதனை பார்த்த புருஷோத்தமன் இரவில் வெளியே நடமாட கூடாது என அறிவுரை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் புருஷோத்தமனை இரும்பு பைப்பை எடுத்து தலையில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். புருஷோத்தமன் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த லட்சுமிபிரியா (20), விக்னேஷ் (20) இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

மகன் திருமண ரத்தால் தந்தை தற்கொலை

மகன் திருமண ரத்தால் தந்தை தற்கொலை

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் தர்மா நகரைச் சேர்ந்தவர் கந்தப்பன் (57). நில புரோக்கர். இவரது மனைவி ஜெயந்தி. இவரது மூத்த மகன் சுனில்(30). சமீபத்தில் இவருக்கும், திருவொற்றியூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்து உள்ளது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெற இருந்த நிலையில் சில காரணங்களால் பெண் வீட்டார் திருமணத்தை நடத்த மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சுனிலின் தந்தை கந்தப்பன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த கந்தப்பன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

படுகொலை

படுகொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (44). இவர் இன்று காலை 8:00 மணியளவில் வீட்டிலிருந்து தனது வெல்டிங்பட்டரைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அவரை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் டூவீலரை இடித்து கீழே தள்ளிய பின் பட்டரை உரிமையார் மகாலிங்கத்தை ஒடஒட விரட்டி அரிவாளால் தலையில் வெட்டிபடு கொலை செய்தனர்.

காரணம் காரணம் என்ன?

காரணம் காரணம் என்ன?

விசாரணையில் மகாலிங்கத்திற்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அப்பெண் தற்கொலை செய்துள்ளார் அந்த பெண் தற்கொலை இறப்பிற்கு மகாலிங்கம் தான் காரணம் என கூறப்படுகிறது இதனால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தம்பி கார்த்தி,தாய்மாமன் சுந்தரபாண்டி அந்தப் பெண்ணின் கணவர் மணிகண்டன் இந்த கொலையை செய்து உள்ளனர் கார்த்தியும் சுந்தரபாண்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

6 கிலோ கஞ்சா பறிமுதல்

6 கிலோ கஞ்சா பறிமுதல்

வியாசர்பாடி கூட்ஸ் ஷீட் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த 2 பேரை போலீசார் பிடிக்க முற்பட்ட னர். அவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பமுயற்சி செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து அவர்கள் இருவரும் காயமடைந்தனர்.அவர் களை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய் குமார் (28), ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஆந்திரா பாபு( 27) என்பது தெரிய வந்தது. இருவரிடமி ருந்தும் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் சஞ்சயின் தந்தையான பாடி சரவணன் என்பவரது வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.

 1,100 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்

1,100 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்

வண்ணாரப்பேட்டையில் உள்ள கார் பார்க்கிங்கில் 1,100 கிலோ செம்மரக்கட்டைகளை கடத்துவதற்காக வைத்திருந்தபோது போலீசார் அதனை கண்டுபிடித்தனர். அந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த இடத்தின் உரிமையாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஹெலிகாப்டர் சகோதரர்கள்

ஹெலிகாப்டர் சகோதரர்கள்

கும்பகோணம் தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம் ஆர் கணேஷ் மற்றும் எம் ஆர் சுவாமிநாதன் நிதி நிறுவனம் பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து ஹெலிகாப்டரில் வலம் வந்த இவ்விருவரும் நூறு கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடி செய்து தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான கிரிஷ் பால் பண்ணையில் 500-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ளதாகவும் 150 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

ஊழியர்களுக்கு மிரட்டல்

ஊழியர்களுக்கு மிரட்டல்

மாடுகளுக்கு தீவனம் வாங்க காசு இல்லாததால் மாடுகள் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறது. தலைமறைவு ஆவதற்கு முன்பு 85 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி உள்ளது உடனே வழங்குங்கள் என ஊழியர்கள் கேட்டதற்கு அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர் மோசடி சகோதரர்கள்.இந்த வீடியோ ஆதாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து தங்களுக்கு உரிய இழப்பீட்டை வாங்கி தரவேண்டுமென மாட்டுப் பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
An 8-year-old boy jumped to the rescue of a girl who fell into a well in Manapparai. The collector presented him with a gift of appreciation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X