சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா

Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 80 அதிகாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

80 officers, staffers of Southern Railway Chennai division test Coronavirus positive

பின்னர் மே 1-ந் தேதி நாடு முழுவதும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் விமானப் போக்குவரத்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் சில அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனால் சென்னை கோட்ட தலைமை அலுவலகம் கடந்த வியாழக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது சென்னை கோட்டத்தில் மொத்தம் 80 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கொரோனா கட்டுக்குள் உள்ளது - எல்.முருகன்மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கொரோனா கட்டுக்குள் உள்ளது - எல்.முருகன்

இதனைத் தொடர்ந்து அனைத்து சென்னை கோட்ட பணியாளர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

English summary
80 officers, staffers of Southern Railway's Chennai division test Coronavirus positive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X