சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு- பீலா ராஜேஷ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ்... யார் இந்த பீலா ராஜேஷ்?

    தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 485 ஆக இருந்தது. பலியானோரின் எண்ணிக்கை 5 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் 39 லட்சம் பேர் சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் இருக்கின்றனர். 4,612 பேருக்கு கொரோனா சோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 571 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. 1848 பேர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

    தெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு தெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 7 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். 9,22,860 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். சோதனையில் கொரோனா இல்லை என்றாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்.

    டெல்லி மாநாடு

    டெல்லி மாநாடு

    தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் 1248 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. RT PCR முறையின் படி ஆஎன்ஏவை சோதனை செய்து வருகிறோம். அந்த சோதனை முடிவுகள் வர குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகிறது.

    மூச்சுத் திணறல்

    மூச்சுத் திணறல்

    சில நேரங்களில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியாத நிலைக் கூட அந்த சோதனை மூலம் இருக்கிறது. மருத்துவ உபகரணங்களை அதிகமாக வாங்கி வருகிறோம். இன்று காலை உயிரிழந்தவர் நேற்று வரை நன்றாக இருந்தார், இரவு நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.

    ஸ்டேஜ் 2

    ஸ்டேஜ் 2

    மகாராஷ்டிரத்தைவிட அதிக அளவில் பாதிப்பு இருந்தாலும் அவர்களை விட தமிழகத்தில்தான் அதிகம் பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் ஸ்டேஜ் 2-வில்தான் இருக்கிறது. சமூக பரவல் என்ற நிலைக்குச் செல்லவில்லை. அந்த நிலைக்கு செல்லாமல் இருக்கத்தான் அரசாங்கம் போராடி வருகிறது என்றார் அவர்.

    English summary
    86 more cases found positive corona in Tamilnadu, says TN Health Department Secretary Beela Rajesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X