தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. யார், யார் எங்கே?.. முழு விவரம்!
சென்னை: தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் 9 ஐ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்/செயலராக ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக ராஜராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஜவுளித்துறை ஆணையராக வள்ளலார், கலை மற்றும் கலாசாரத்துறை ஆணையராக பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமனம் செய்யப்ட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.