சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 9 எம்.எல்.ஏ.க்கள் மரணம்... திமுகவில் 5 பேர்... அதிமுகவில் 4 பேர்

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அதில் கருணாநிதி உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரும், ஜெயலலிதா உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் அடங்குவர்.

தற்போதைய நிலவரப்படி சேப்பாக்கம், குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

நல்லவேளை.. ஊர் பெயர்களை மாற்றினார்கள்.. அதிலும் இந்த 8 பெயரை இத்தனை நாளா மாற்றாததே பெரிய தப்பு நல்லவேளை.. ஊர் பெயர்களை மாற்றினார்கள்.. அதிலும் இந்த 8 பெயரை இத்தனை நாளா மாற்றாததே பெரிய தப்பு

9 எம்.எல்.ஏ.க்கள்

9 எம்.எல்.ஏ.க்கள்

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 134 இடங்களை கைப்பற்றியது. திமுக 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளை திரும்பிப்பார்த்தோம் என்றால் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா உட்பட

ஜெயலலிதா உட்பட

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சீனிவேல் மூளை பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.. இதனிடையே சீனிவேல் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஏ.கே.போஸ் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கருணாநிதி உட்பட

கருணாநிதி உட்பட

திமுகவில் அக்கட்சியின் தலைவராகவும், திருவாரூர் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த கருணாநிதி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். இதனிடையே இந்தாண்டு 2020-ல் மட்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூர் தொகுதி கே.பி.பி.சாமி, குடியாத்தம் தொகுதி காத்தவராயன், சேப்பாக்கம் தொகுதி ஜெ.அன்பழகன் என சேர்த்து கடந்த 4 ஆண்டுகளில் 5 எம்.எல்.ஏ.க்களை இழந்துள்ளது திமுக.

சட்டமன்ற பலம்

சட்டமன்ற பலம்

தற்போதைய நிலவரப்படி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது. திமுகவின் பலம் 97 ஆக குறைந்துள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளும் காலியாக உள்ளதால் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

English summary
9 mla death in last 4 years in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X