சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் மரணம்- சென்னையில் மட்டும் 29 பேர் பலி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு மொத்தம் 92 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 29 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

92 Coronavirus deaths in TN on Thursday

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 5892 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரேநாளில் 92 பேர் கொரோனா, மற்றும் பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மீண்டும் 1,000க்கும் கீழே கொரோனா பாதிப்பு! கோவை, கடலூரில் தொடரும் அதீத உச்சம்!சென்னையில் மீண்டும் 1,000க்கும் கீழே கொரோனா பாதிப்பு! கோவை, கடலூரில் தொடரும் அதீத உச்சம்!

இதில் சென்னையில்தான் அதிகமாக 29 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை

  • அரியலூர் 0 (31)
  • செங்கல்பட்டு 7 (447)
  • சென்னை- 29 (2814)
  • கோவை- 3 (318)
  • கடலூர்- 2 (130)
  • தருமபுரி- 0 (13)
  • திண்டுக்கல் - 2 (131)
  • ஈரோடு - 1 (45)
  • கள்ளக்குறிச்சி- 2 (81)
  • காஞ்சிபுரம் - 2 (258)
  • கன்னியாகுமரி - 2 (187)
  • கரூர்- 2 (28)
  • கிருஷ்ணகிரி- 1 (33)
  • மதுரை- 0 (360)
  • நாகப்பட்டினம் - 3 (48)
  • நாமக்கல் - 1 (40)
  • நீலகிரி - 1 (12)
  • பெரம்பலூர்- 0 (17)
  • புதுக்கோட்டை- 1 (103)
  • ராமநாதபுரம்- 0 (107)
  • ராணிப்பேட்டை-2 (127)
  • சேலம் - 4 (165)
  • சிவகங்கை - 0 (109)
  • தென்காசி - 1 (105)
  • தஞ்சாவூர்- 2 (119)
  • தேனி- 2 (149)
  • திருப்பத்தூர்- 1 (64)
  • திருவள்ளூர்- 7 (421)
  • திருவண்ணாமலை- 2 (171)
  • திருவாரூர் - 3 (50)
  • தூத்துக்குடி- 0 (114)
  • நெல்லை- 2 (180)
  • திருப்பூர்- 3 (72)
  • திருச்சி - 0 (122)
  • வேலூர்- 0 (171)
  • விழுப்புரம்- 2 (72)
  • விருதுநகர்- 2 (193)
English summary
Tamil Nadu reported an addition of 92 coronavirus deaths cases on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X