• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வயிறு எரியுது... இவ்வளவா வீணாக்குறோம்.. ஆண்டு தோறும் 93 கோடி டன் உணவு வீணாகுதாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பக்கம் விவசாயிகள் உணவு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு அதற்காக அவர்கள் பல வகையான போராட்டங்களையும் எதிர்கொண்டு வரும் அதே நேரத்தில் மறுபக்கம் அதிகளவிலான உணவுகள் வீணாக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மனிதனின் பொறுப்பில்லாதத்தனமும், அக்கறையின்மையுமே காரணம். உணவு வீணாக்கப்படுவது குறித்து ஐநா சபையின் ஆய்வுறிக்கை ஒன்று நேற்று வெளியானது.

 கார்பெட்டைத் தூக்கிப் பார்த்தா... என்னா ஒரு புத்திசாலித்தனம்.. செம தம்பதி! கார்பெட்டைத் தூக்கிப் பார்த்தா... என்னா ஒரு புத்திசாலித்தனம்.. செம தம்பதி!

அதில் ஒவ்வொரு தனி நபரும் சராசரியாக ஆண்டுக்கு 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக தெரிவித்துள்ளது. உலக அளவில் மொத்தம் 93 கோடியே 10 லட்சம் டன் உணவு வீணடிக்கப்படுகிறதாம்.

 17 சதவீத உணவு

17 சதவீத உணவு

இதில் பெரும்பாலான உணவு வீடுகளில் வீணாக்கப்படும் உணவுகளே. உலகம் முழுவதிலுமாக மொத்தம் 17 சதவீத உணவு யாருக்கும் பயனின்றி வீணாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 3 பில்லியன் மக்கள்

3 பில்லியன் மக்கள்

2019 ஆம் ஆண்டில் 931 மில்லியன் டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளன. சுமார் 3 பில்லியன் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் இறக்க நேருடுகிறது.

 கட்டுப்படுத்த வேண்டும்

கட்டுப்படுத்த வேண்டும்

மேலும் மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இனிமேல் இது போன்று உணவு வீணாக்கபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஐநா உணவு பாதுக்காப்பு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில்

சீனாவில்

அமெரிக்காவில் ஒரு வீடானது ஆண்டுக்கு சராசரியாக 59 கிலோ உணவை வீணடிக்கிறதாம். சீனா இதை விட மோசம்.. அங்கு ஒரு வீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 64 கிலோ உணவை வீணடிக்கிறார்களாம். இனிவரும் நாட்களில் உணவு வீணாவதை தவிர்ப்போம் என்ற சபதத்தை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்வோம்.

English summary
UNO report says that every individual wastes 50 kilo food per year. Nearly 17% of world's total food is getting wasted per year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X