• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழகத்தின் 4.5 கோடி மக்களின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் கருணாநிதி- டாக்டர் எழிலன் புகழாரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 4.5 கோடி மக்களின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி என்று திமுக எம்.எல்.ஏ.வான டாக்டர் எழிலன் நாகநாதன் புகழாரம் சூட்டினார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே. ரவீந்தரன் ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சி இணையவழியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எழிலன் நாகநாதன் பேசியதாவது:

திராவிடர் இயக்கம் என்பது குடும்பம் குடும்பமாக தொடரக் கூடியது. என்னுடைய தந்தை பேராசிரியர் நாகநாதன் திமுகவின் தேர்தல் அறிக்கைகளை தயாரிப்பதில் உதவியவர். மறைந்த முரசொலி மாறனுடன் நெருக்கமாக பணியாற்றினார். நான் 5-ம் வகுப்பாக படித்து கொண்டிருந்த போது 1991-ம் ஆண்டு தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. அப்போது என்னுடைய தந்தை நாகநாதன், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியுடன் காலையில் வாக்கிங் செல்வார். ஒருநாள் என் அப்பா, ஒரு ஸ்கேலையும் நோட்டு புக்கும் எடுத்துட்டு அறிவாலயத்து வா என்றார். எங்கள் வீடு டிஎம்எஸ் வளாகத்தில் இருந்தது. அப்போது திமுகவை மீண்டும் எழுச்சி பெற வைக்க வேண்டும்; அண்ணா அறிவாலயம் மீண்டும் களைகட்ட வேண்டும் என்கிற உக்கிரத்துடன் இருந்தார் கருணாநிதி. அந்த சிறிய வயதில் எனக்குள் அதுமிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காட்பாதர் படத்தின் காட்சி போல..

காட்பாதர் படத்தின் காட்சி போல..

2006-ல் கிராமப்புறங்கள் மருத்து மாணவர்கள் பணிபுரிவது தொடர்பான சிக்கல் வந்த போது மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தோம். தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் வீரியமாக நடத்தது. அப்போது அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்தார். இது அரசியல் ரீதியாகவும் பிரச்சனையானது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாணவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச வேண்டும். நாங்கள் உள்ளே போனபோது, என்னை நாகநாதன் பையன் என கருணாநிதியிடம் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூற, அட நம்ம பையனா என மகிழ்ந்து போனார். அப்போது, மாணவர்கள் தரப்பு விளக்கத்தை நான் கூற நீ நிறுத்து.. எல்லாம் சரி செய்துகொள்ளலாம் என நம்பிக்கை தந்தார். அதனை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம். அப்போது, காட்பாதர் படத்தில் வருவது போல மாணவர் சங்க பிரதிநிதிகள் கருணாநிதி கையில் முத்தம் கொடுத்துவிட்டு வெளியேறிய காட்சியும் மறக்க முடியாது.

மருத்துவராக கருணாநிதியுடன்...

மருத்துவராக கருணாநிதியுடன்...

பின்னர் மருத்துவராக பணிபுரிந்து வந்த போது டாக்டர் கோபால் சொன்னதன் அடிப்படையில் கருணாநிதியை பரிசோதிக்க சென்றேன். முதல் நாளில் அவருடனான உரையாடலில் ஒரு பெரியாரிஸ்ட் என்கிற வகையில் வெளிப்படுத்தினேன். அடுத்தநாள்தான், நாகநாதன் பையனா? நீ சொல்லவே இல்லையே என்றார். நீங்களும் கேட்கவே இல்லை அய்யா என்றேன். அதன்பின்னர் ஏராளமான வரலாற்று செய்திகள், பல்வேறு துறைசார் செய்திகளை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். ஒருவரை பார்த்த உடனே நீங்கள் யார்? உங்கள் குணநலன் என எல்லாவற்றையும் ஸ்கேன் செய்துவிடக் கூடியவர். அண்ணா காலத்தில் கிராமங்களில் திமுக கிளை கழகங்கள் உருவான வரலாறு எல்லாம் நிறைய சொல்வார். அவர் போகாத தமிழக கிராமங்களே இல்லை.. நாங்கள் மருத்துவ பணிக்காக சில கிராமங்களுக்கு சென்றதாக சொன்னால் கூட, அந்த கிராமத்தின் திமுக மூத்த நிர்வாகி உள்ளிட்ட விவரங்களை விரல் நுனியில் வைத்து கொண்டு சொல்வார். கருணாநிதியை பொறுத்தவரை பெரியார், அண்ணாதான். பெரியார் நம் அடையாளம்; அண்ணா நம் வழிகாட்டி என்பார். இந்த இருவரையும் உள்வாங்கியே தேர்தல் அரசியல், கட்சி கட்டமைப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அனைத்தையும் செயல்படுத்தியவர் கருணாநிதி.

மக்களை நேசித்தவர்

மக்களை நேசித்தவர்

மக்களுக்கான நலத்திட்டங்கள் சென்று சேரும் போது அதை ரசிப்பார். அன்று கருணாநிதி போட்ட அடித்தளம்தான் இன்று நம்மால் கொரோனாவை விரட்ட முடிந்தது. வெற்றி- தோல்வி எதுவந்தாலும் மக்கள் மீது அவர் கோபத்தை காட்டியதே கிடையாது; வெற்றி- தோல்வி வந்தாலும் இறுக்கத்தை காட்டாதவர் கருணாநிதி. இன்று தமிழகத்துக்கு செயல்திறன் மிக்க திறனை முதல்வர் மு.க.ஸ்டாலினை செதுக்கி கொடுத்தவர் கருணாநிதி.

உரிமை குரல்களில் கருணாநிதி

உரிமை குரல்களில் கருணாநிதி

மொழி பாதுகாப்பு, மாநில உரிமை, சாமானியர்களை அதிகாரப்படுத்துவது என இன்று நமக்குள் அனைத்துமாக கருணாநிதி நிறைந்தே இருக்கிறார். இன்று நாம் அத்தனை உரிமை குரல்களிலும் கருணாநிதி இருந்து கொண்டே இருக்கிறார். இவ்வாறு டாக்டர் எழிலன் எம்,.எல்.ஏ தெரிவித்தார்.

English summary
Dr Ezhilan Naganathan praised Former CM Karunanidhi on 98th Birthday: Anniversary Meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X