சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்கள்.. முதன்மை கல்வி அலுவலர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சுமார் 100% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பிவிட்டதாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஊழியர் அமைப்பினர் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

99.9% teachers return to their works in Chennai

இந்த நிலையில், சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி இன்று காலை, நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: சென்னையில் 99.9% ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்.

போராட்டம் நடந்த காலகட்டத்தில் கூட, பள்ளிகளை மூடும் அளவுக்கு நிலைமை போகவில்லை. அனைத்து பள்ளிகளும் இயங்கியபடிதான் இருந்தன. இப்போது மேலும் இயல்பான நிலைமைக்கு பள்ளிகள் திரும்பிவிட்டன.

99.9% teachers return to their works in Chennai

ஆசிரியர்கள் வருகை நிலவரம் பற்றி, பள்ளிகளில் இருந்து இன்று காலை 9 மணிமுதல் எங்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர்கள் வருகை தந்து கையெழுத்திடுவதை கொண்டு நாங்கள் இந்த புள்ளிவிபர கணக்கிற்கு வந்துள்ளோம்.

பள்ளிக்கு வருகை தராத 4 ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள். இப்போது பணியாற்றிய அதே பள்ளியில் அவர்களுக்கு பணியிடம் கொடுக்கப்படாது. சென்னையை பொறுத்த அளவில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதால் செய்முறைத் தேர்வுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

English summary
In Chennai 99.9 percentage teachers return to their works after call of their strikes says Chennai principal education officer Tiruvalar Selvi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X