சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏங்க இப்படி பண்றீங்க.. வீட்டில யாரும் மதிக்கலை சார்.. மறுபடியும் ஜெயிலுக்கு போன ஞானப்பிரகாசம்!

ஜெயில் சாப்பாட்டை ஒரு திருடன் புகழ்ந்து பேசி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த செய்தியை நாம எப்படி எடுத்துக்கறதுன்னே தெரியல.. வித்தியாசம்னு சொல்றதா, கண்றாவின்னு சொல்றதா, ஆச்சரியம்ன்னு சொல்றதா என்பதே பிடிபடவில்லை. நீங்களே படிங்க!

இந்த செய்தியின் ஹீரோ பெயர் ஞானபிரகாசம். வயசு 51 ஆகிறது. சென்னையில், பழைய பெருங்களத்தூரை சேர்ந்தவர்.

போன மாசம் இவர் சிசிடிவி கேமராவை திருடிவிட்டார். அதனால், தாம்பரம் போலீஸார் இவரைக் கைது செய்து ஜெயிலில் போட்டார்கள்.

நிர்மலாதேவி தெளிவாதான் இருக்காங்க.. நாமதான் குழம்பிட்டோம் போல.. புது ஆடியோவால் மேலும் குழப்பம்! நிர்மலாதேவி தெளிவாதான் இருக்காங்க.. நாமதான் குழம்பிட்டோம் போல.. புது ஆடியோவால் மேலும் குழப்பம்!

பைக்

பைக்

ஆனால் கடந்த மாசம் 29-ம் தேதி ஜாமீனில் இருந்து வெளியே வந்துவிட்டார் ஞானபிரகாசம். வந்தவர் சும்மா இல்லை.. ஜூலை 5-ம் தேதியே ஒரு பைக்கை திருடிவிட்டார். அந்த பைக்கில் ஜாலியாக ஊரை சுற்ற ஆரம்பித்தார். அதுதான் திருட்டு பைக் ஆச்சே, எவ்வளவு பெட்ரோல் உள்ளே இருந்தது என தெரியவில்லை. பாதியிலேயே பைக் நின்றுவிட்டது.

பெட்ரோல்

பெட்ரோல்

பெட்ரோல் போட கையில் காசும் இல்லை. அதனால் இன்னொரு பைக்கில் இருந்து பெட்ரோல் திருடி இதில் ஊற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்து, பெட்ரோலும் திருடி உள்ளார். அந்த சமயத்தில்தான் போலீசாரிடம் சிக்கி கொண்டார். அப்போதுதான் போலீசாரிடம் அந்த முக்கியமான ரகசியத்தை சொல்லி உள்ளார்.

கவனிக்கவில்லை

கவனிக்கவில்லை

"எனக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைங்க இருக்காங்க. படிச்சிட்டு இருக்காங்க. எனக்குன்னு நிரந்தரமா ஒரு வேலை இல்லை. அதனால வீட்டில என்னை யாருமே சரியா கவனிக்கிறது இல்லை. என்னை கவனிக்காத வீட்டில் எனக்கு இருக்கவும் பிடிக்கல. ஆனால் ஜெயிலில் என்னை எல்லாரும் நல்லா பாத்துக்கறாங்க. வேளா வேளைக்கு சாப்பாடும் நல்லா போடறாங்க. சாப்பாடு நல்லாவும் இருக்கு.

அறிவுரை

அறிவுரை

வெளியில போனால் என்ன சார் செய்யறது, கையில் காசு இல்லை, ஆனா சாப்பிடணும் இல்லை? அதனாலதான் திருடறேன்" என்றார். இதை கேட்டு மிரண்ட போலீசார், இனிமேல் இப்படியெல்லாம் திருட கூடாது என்று சொல்லி இப்போதைக்கு ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர். ஞானப்பிரகாசம் வெளியே வந்தால்தான் தெரியும், இனி என்ன செய்ய போகிறார் என்று!

English summary
Comedy Thief gives Statement to Police that"I stole for eat Jail Food" in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X