சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஷ்பு வீட்டருக்கே நம்பர் பிளேட் இல்லாமல் 10 நாளாக நிற்கும் கன்டெய்னர் லாரி.. போலீஸுக்கு தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சாந்தோமில் குஷ்பு வீட்டருகே நம்பர் பிளேட் இல்லாமல் 10 நாட்களாக ஒரு கன்டெய்னர் லாரி நிற்பதாக புகார் எழுந்தது.

நடிகை குஷ்பு சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டருக்கே ஒரு கன்டெய்னர் லாரி 10 நாட்களாக நிற்கிறது. அதில் நம்பர் பிளேட் கூட இல்லை என கூறப்படுகிறது.

அந்த லாரியை நடிகை குஷ்பு படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த 10 நாட்களாக நான் வசிக்கும் தெருவின் முனையில் இந்த கன்டெய்னர் லாரி நின்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து ஒருவரும் புகார் அளிக்க முன்வரவில்லை.

சென்னை போக்குவரத்து

சென்னை போக்குவரத்து

நம்பர் பிளேட் கூட இல்லாத லாரியால் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த லாரி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸுக்கும் பதிவை அனுப்பியிருந்தார். அதில் சென்னை போக்குவரத்து துறை எந்த பகுதியில் வாகனம் நிற்கிறது என்பது குறித்த தகவல்களை கேட்டுள்ளனர்.

வாகனம்

வாகனம்

அதற்கு குஷ்பு, எனது புகாருக்கு உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி, பாராட்டுக்குரியது என கூறிய குஷ்பு அந்த வாகனம் நின்று கொண்டிருக்கும் இடத்தையும் தெரிவித்துள்ளார்.

தெருவில்

முன்னதாக குஷ்பு டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டிருந்ததற்கு நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்தனர். மேலும் நீங்கள் ஏன் போலீஸில் சொல்லவில்லை என்றும் கேட்டிருந்தனர். இதனால் கோபமடைந்த குஷ்பு, அந்த லாரி எனது தெருவில் நிற்கவில்லை.

குஷ்பு வாக்குவாதம்

குஷ்பு வாக்குவாதம்

அப்படியிருந்தால் நானே புகார் அளித்திருப்பேன். யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டு நடையை கட்டுங்கள் என கூறியிருந்தார். இது தொடர்பாக ஏராளமானோருடன் குஷ்பு டுவிட்டரில் வாக்குவாதம் செய்தார்.

English summary
Kushboo posted in her twitter that This container has been parked at the corner of our street for the last 10days..not even a single citizen around that has even bothered to check or complaint. It raises suspicion as it does even have a number plate. I urge chennai police to kindly look into it immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X