சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை நமதே படத்தில் எனக்காக காத்திருந்தார் எம்.ஜி.ஆர்... சர்ச்சையானது கமலின் பிக்பாஸ் பேச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Bigg boss 3: பிக்பாஸில் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய குமுறிய கமல்ஹாசன் - வீடியோ

    சென்னை: நாளை நமதே திரைப்படத்தில் தமது கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர். ஒரு மாதம் காத்திருந்தார் என கமல்ஹாசன் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 சீசனையும் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் சனிக்கிழமையன்று, எம்ஜிஆர்-ன் நாளை நமதே படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு வந்தது. என்னுடைய கால்ஷீட்டுக்காக 1 மாதம் காத்திருந்தனர். ஆனால் நடிக்க முடியாமல் போனது.. அது மிகப் பெரிய இழப்பு என இப்போது நினைக்கிறேன் என கூறியிருந்தார்.

    அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

    நாளை நமதே படத்தில் நான் தம்பியாக நடிக்க என் கால்ஷீட்டுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் காத்திருந்தார்''னு உலக நாயகன் கமல் சொல்லியிருக்காரு.. அந்த படத்தை டைரக்ட் பண்ண கேஎஸ் சேதுமாதவன் கிட்ட கேக்கலாம்னு பார்த்தா அவருக்கு 88 வயசு ஆவுது. உண்மையை சொல்லுவாரோ மாட்டோரோ?

    மலையாளத்தில் கமல்

    மலையாளத்தில் கமல்

    கேஎஸ் சேதுமாதவன்தான் கமலை முதலில் கன்யா குமாரி என்ற மலையாள படத்தில் ஹீரோவாக்கியவர். இன்னும் கேட்டால் 1962லேயே மலையாளத்தில் கமலை சிறுவனாய் அறிமுகப்படுத்தியவரும் சேதுமாதவன்தான்.

    நம்பவே முடியலை

    நம்பவே முடியலை

    மிகப்பெரிய ஜாம்பவான் டைரக்டர். அப்பேர்பட்டவர் கமலோட கால்ஷீட்டுக்காக எம்ஜிஆரோட சேர்ந்து ஒரு மாதம் காத்திருந்தாரா? நாளை நமதே படம் ஆரம்பித்த 1974ல் கமல் அவ்ளோ பிசியான லீடிங் ஆர்ட்டிஸ்டா? ஒன்னுமே புரியலை.. இங்கே ஒரு முக்கியமான விஷயம்..

    எம்ஜிஆரின் எண்ணம் இது

    எம்ஜிஆரின் எண்ணம் இது

    நடிகர் என்ற வகையில் எம்ஜிஆர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பார். தன்னை மீறுகிற அளவுக்கு ஆண் பாத்திரம் எதுவும் அமைந்துவிடக்கூடாது என்று பார்த்துக் கொள்வதில் உஷார் பார்ட்டி. சின்ன வயசு ஹீரோக்களை கிட்ட விடவே மாட்டார்.. சிவாஜி, ஜெமினி போல் மற்ற முன்னணி நடிகர்களுடன் சகஜமாக நடிக்கும் குணம் எம்ஜிஆரிடம் கிடையாது..

    இந்தி படம் யாதோன்கி பாரத்

    இந்தி படம் யாதோன்கி பாரத்

    1973ல் இந்தியா முழுக்க ஹிட் அடித்த யாதோன்கி பாரத் படத்தில் தர்மேந்திரா, விஜய் அரோரா தாரிக், என்று மூன்று ஹீரோக்கள். மூன்று பேருக்குமே நல்ல ஸ்கோப் இருக்கும்.

    தமிழில் இந்தி படம்

    தமிழில் இந்தி படம்

    தமிழ்ல எம்ஜிஆர் சிவகுமார் கமல்ன்னு யோசனை இருந்ததாம். எம்ஜிஆருக்கு அப்புறம் என்ன வேலை இருக்கு? சீனியர் தர்மேந்திரா ரோல்ல சிவகுமாரை போட்டுட்டு எம்ஜிஆர் சிவக்குமாருக்கு தம்பியா நடிக்க இருந்தாரோ? நமக்கு தெரியல.. கமலுக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா, கிட்டாரை வெச்சி கிட்டு அன்பு மலர்களே நம்பியிருங்களேன்னு பாடிப் பாடி படத்துலே மேடையோடவே போயிருப்பாரு.. அவ்ளோதான்..

    எம்ஜிஆரின் கவனம்

    எம்ஜிஆரின் கவனம்

    அதனால்தான் எம்ஜிஆர் உஷாரா எந்த யங் ஹீரோ வையும் கிட்ட சேர்த்துக்க கூடாதுன்னு முதல் ரெண்டு ரோலை அவரே எடுத்துகிட்டாரு., கிட்டாரை வெச்சி ஸ்டேஜ்ல மட்டுமே பாடிக்கிட்டு இருக்கிற ரோலுக்கு தெலுங்குல இருந்து சந்திரமோகனை கூட்டிக்கிட்டு வந்து போடச்சொன்னாரு. படத்துல சந்திரமோகனுக்கு ''இந்த பாட்டை பாடி பிரிஞ்சிபோன ரெண்டு இதயத்தை தேடிக்கிட்டு இருக்கேன்''னு சொல்றதுதான் அதிகபட்ச டயலாக் அப்படிபட்ட எம்ஜிஆர், எப்படிபட்ட எம்ஜிஆர்? அதுவும் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் இதயக்க னின்னு அடுத்தடுத்து பிளாக் பஸ்டர்களை கொடுக்கிற காலத்தில் இருந்த நெம்பர் ஒன் எம்ஜிஆர், 1975ல் கமலுக்காக காத்திருந்தாரா?

    கமல் முன்னணி ஹீரோ இல்லையே

    கமல் முன்னணி ஹீரோ இல்லையே

    1977ல் 16 வயதினிலே படம் வருவதுற்கு முன்புவரை, தமிழில் கமல் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும் முன்னணி கதாநாயகன் இல்லை, நமக்கு தெரிஞ்சி தமிழ்ல உணர்ச்சிகள், குமார விஜயம் பட்டாம் பூச்சி ன்னு ஹிட் அடிக்காத படங்கள்ல ஹீரோ.. அவ்வளவே. அப்புறம் இங்கே இன்னொரு, மேட்டரு. யாதோன்கி பாராத் தெலுங்கு வெர்ஷன்ல என்டிஆர் இன்னும் படு உஷாரு.. கிட்டார் தம்பி ரோலுக்கு தன் பையன் பாலகிருஷ்ணாவையே போட்டுகிட்டாரு..

    English summary
    A new Controverys was erupted over the Actor Kamal Haasan's comments on MGR's Naalai Namathe film.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X