சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் அதிபுத்திசாலித்தனம் கொண்ட காக்கை! வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் அதிபுத்திசாலித்தனம் கொண்ட காக்கை! வைரல் வீடியோ

    சென்னை: காக்கா ஒன்று தான் விரும்பிய பெரிய மீனை மீன் வியாபாரியிடம் கேட்டு பெற்றுக் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    தெருக்களில் மீன் வியாபாரிகள் வருவது அவர்களது கனத்த குரல் மூலம் கேட்கிறதோ இல்லையோ, அந்த வாகனத்தை சுற்றியும் கா.. கா.. என கத்திக் கொண்டு வரும் காக்கைகள் மூலம் தெரியவரும்.

    A Crow is getting big fish from the trader

    பொதுவாக மீன் வாகனத்தை சுற்றி வரும் காக்கை மற்றும் நாயை வியாபாரி துரத்துவதுதான் வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    அதில் மீன் வியாபாரி ஒருவர் பெரிய மீன், சிறிய மீன் என வகைப்படுத்தி கடையை விரிக்கிறார். அப்போது அங்கு ஒரு காக்கை வருகிறது. இதை பார்த்த மீனவர் காக்கையை துரத்தாமல் அதற்கு ஒரு சிறிய மீனை எடுத்துக் கொள்ளுமாறு கை காட்டினார்.

    35 வயசு மஞ்சு.. ஜாலியா இருக்க முடியல.. 16 வயசு மகளை கொன்ற இளம் தாய்.. கேரளாவில் பரபரப்பு35 வயசு மஞ்சு.. ஜாலியா இருக்க முடியல.. 16 வயசு மகளை கொன்ற இளம் தாய்.. கேரளாவில் பரபரப்பு

    ஆனால் அந்த காக்கைக்கு அந்த மீன் வேண்டாமாம். இதனால் மீண்டும் கா... கா.. என கரைகிறது. அப்போதும் ஒரு மீனின் பெயரைச் சொல்லி இந்த மீனை எடுத்துக்கோ என்கிறார். ஆனால் அதையும் அந்த காகம் பெற மறுக்கிறது.

    கடைசியாக காக்கைக்கு பெரிய மீனை காட்டியவுடன் சற்றும் தாமதிக்காமல் பெரிய மீனை கவ்விக் கொண்டு சிட்டாட்டம் பறந்து சென்றுவிட்டது. நாம் சிறியதாக இருக்கும் போது காகம் குறித்த ஒரு கதையை கேள்விப்பட்டிருப்போம்.

    அதில் வடை சுடும் பாட்டியை ஏமாற்றிவிட்டு வடையை எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறது. இங்கு பாட்டியை ஏமாற்றும் காக்கை, குள்ளநரியிடமும் அதே புத்திசாலித்தனத்தை காட்டி வடை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும்.

    English summary
    A video goes viral that a Crow is getting big fish from the trader.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X