சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தின் 38 லோக்சபா தொகுதிகள் யாருக்கு? .. எக்சிட் போலின் ஒரு டீட்டெய்ல்டு ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit poll 2019 | 38 இடங்களை திமுக வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு

    சென்னை: எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெற்றி பெறும் என்பது குறித்து நியூஸ் எக்ஸ் நடத்திய ஒரு எக்சிட் போலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்த முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகின. இதில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் நியூஸ் எக்ஸ் கணித்துள்ளது. அதில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

    பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற அமைச்சர்.. உபி அமைச்சரவையிலிருந்து அதிரடி நீக்கம் பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற அமைச்சர்.. உபி அமைச்சரவையிலிருந்து அதிரடி நீக்கம்

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி

    லோக்சபா தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 4 இடங்கள் வழங்கப்பட்டன. அதில் கள்ளக்குறிச்சியில் மட்டும் தேமுதிக வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுதீஷ் வெற்றி பெறுவார் என கூறியுள்ளது. மற்ற 3 தொகுதிகளில் தேமுதிகவுக்கு வெற்றி இல்லை.

    ஒரு தொகுதியில் வெற்றி

    ஒரு தொகுதியில் வெற்றி

    திமுக தொகுதியில் போட்டியிட்ட மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டன. ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றி பெறுவார் என இந்த கணிப்பு கூறுகிறது. இதனால் மதிமுக தனக்கு கொடுத்த ஒரு இடத்தில் வெற்றி பெறும் என தெரிகிறது.

    விடுதலை சிறுத்தைகள்

    விடுதலை சிறுத்தைகள்

    அது போல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்டனர். அவர்கள் இருவரும் வெற்றி பெறுவர் என கணிப்பு கூறுகிறது. எனவே அவர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர் என தெரிகிறது.

    37 தொகுதிகளில் போட்டி

    37 தொகுதிகளில் போட்டி

    தினகரனின் அமமுக கட்சி 37 இடங்களில் போட்டியிட்டது. இதில் விருதுநகர், திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் அமமுக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

    20 இடங்களில் அதிமுக போட்டி

    20 இடங்களில் அதிமுக போட்டி

    பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக 20 இடங்களில் போட்டியிட்டது. இதில் திருப்பூர், திருவள்ளூர், தேனி, பெரம்பலூர், நாமக்கல், நாகை, கரூர், ஆரணி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.

    20 தொகுதிகளில் திமுக போட்டி

    20 தொகுதிகளில் திமுக போட்டி

    திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் சென்னை சென்ட்ரல், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, சேலம், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.

    தேசிய கட்சிகள்

    தேசிய கட்சிகள்

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெல்லும் என்றும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு வழங்கப்பட்ட 5 தொகுதிகளில் ராமநாதபுரத்தில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

    யார் வெற்றி

    யார் வெற்றி

    நட்சத்திர வேட்பாளர்கள் என சொல்லப்படும் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், எஸ் திருநாவுக்கரசர், இளங்கோவன், ஜோதிமணி உள்ளிட்டோர் தோற்பர் என கருத்து கணிப்புகள் கூறுகிறது. எதுவாக இருந்தாலும் மே 23-ஆம் தேதி மக்கள் அளிக்கும் தீர்ப்பை வைத்தே முடிவு செய்ய முடியும்.

    English summary
    Exit poll survey gives detailed report regarding who will win in 38 (Except Vellore) Loksabha seats in Tamilnadu .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X