சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மறுபடியும் உலா வரும் ''டவுசர் மாடல் ஜட்டி'' விளம்பரம்.. மானம் காக்க மதுகுடிப்போர் சங்கத்தின் ஐடியா !

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், மானம் காக்க '' டவுசர் மாடல் ஜட்டிகளை அணிவீர்'' என்ற விளம்பரத்தை மறுபடியும் உலவ விட்டுள்ளது மதுகுடிப்போர் சங்கம்.

குடிகாரர்களின் மானத்தை காப்பதற்காக கடந்த 2014-ம் ஆண்டு இந்த விளம்பரத்தை அச்சடித்து வெளியிட்டவர் தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வெளியிட்ட விளம்பரம் மீண்டும் வாட்ஸ் அப், முகநூல், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று முதல் உலா வரத் தொடங்கியுள்ளது.

A different advertising poster published by the Liquor drinkers Association

இந்நிலையில் இந்த விளம்பரம் தொடர்பாக அதனை வெளியிட்ட மதுகுடிப்போர் சங்கத் தலைவர் செல்லபாண்டியனை தொடர்பு கொண்டு பேசிய போது, மது அருந்துபவர்களுக்கு மானத்தை காக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தாம் தான் ''டவுசர் மாடல் ஜட்டி அணிவீர்'' என்ற விளம்பரத்தை மறுபடியும் உலவ விட்டதாகவும், இது 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட போஸ்டர் எனவும் கூறினார்.

A different advertising poster published by the Liquor drinkers Association

மது ஆலைகளை மூடாமல் மதுக்கடைகளை மட்டும் மூடக்கோருவதை ஏற்க முடியாது என்றும், மதுக்கடைகள் வேண்டாம் என அதை எதிர்ப்போர் சொல்லும் போது மதுப்ரியர்களாகிய நாங்கள் மதுக்கடைகள் வேண்டும் எனக் கூறுவதில் எந்த தவறும் இல்லை என்கிறார் செல்லபாண்டியன்.

டாஸ்மாக் டோக்கனை ஜெராக்ஸ் எடுத்த குடிகாரர்கள்.. 200 ரூபாய்க்கு விற்பனை.. 16 பேர் கைது டாஸ்மாக் டோக்கனை ஜெராக்ஸ் எடுத்த குடிகாரர்கள்.. 200 ரூபாய்க்கு விற்பனை.. 16 பேர் கைது

குடிகாரர்கள் போதை தலைக்கு ஏறியதும் இருந்த இடத்திலேயே மயங்கி விழுவதுடன், ஆடைகள் களைந்தும் அலங்கோலமாக காட்சியளிப்பர். மேலும் அந்த குடிகாரரின் மானம் கப்பல் ஏறுவதுடன் சந்தி சிரிக்கவும் செய்யும். இதனால் டவுசர் மாடல் ஜட்டிகளை அணிந்துகொண்டால், போதையில் ஒரு வேளை சாலையில் மயங்கி விழுந்தாலும் கூட மானத்த காத்துக்கொள்ளலாம் என்பது மதுக்குடிப்போர் சங்கத்தின் நம்பிக்கையாக உள்ளது.

English summary
A different advertising poster published by the Liquor drinkers Association
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X