• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"காயத்ரி"யால் வந்த வினை.. திமுகவுக்கு இப்படியெல்லாமா "சோதனை" வரும்.. சீண்டி விடுவது யாரோ?

|

சென்னை: "இங்க யாருமே விளம்பரத்துக்கு கிடைக்காமல், ஆந்திராவில் இருந்துதான் மாடலிங்குக்கு பெண்ணை அழைத்து வரவேண்டுமா" என்று முணுமுணுப்புகள் எழும் அளவுக்கு ஒரு போலி விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

ஆன்லைனில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.. இதில் சில தொழில்நுட்ப கோளாறுகளும், குழப்பங்களும் நிலவி வருகின்றன.. இதனால் சோஷியல் மீடியாவில் திமுகவை கிண்டல் செய்து வருவதும் நடந்து வருகின்றன. இந்த கோளாறை சரிசெய்யும் பணியில் திமுக இறங்கி உள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு சிக்கல் திமுகவுக்கு வந்துள்ளது.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாடலிங் பெண் அனகா.. இவரது போட்டோவுடன் 'காணவில்லை' என்ற தலைப்பில் கீழ் ஒரு விளம்பரம் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. அந்த விளம்பரத்தில் "உயரமான, அழகான, 24வயது பெண்ணை காணவில்லை. அன்பு மகளே காயத்ரி... தயவு செய்து, வீட்டுக்கு வந்துடு... நாங்கள் எல்லாருமே ரொம்ப கவலையுடன் இருக்கிறோம்.

வேளாண் மசோதா...பஞ்சாபில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்... 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து!!

ஆன்லைன்

ஆன்லைன்

உன்னுடைய, 2 கோரிக்கைகளை, நாங்கள் ஏற்று கொள்கிறோம். முதலாவது கோரிக்கையின் படி, நீ விரும்பிய வேலைக்கு போகலாம்.. நாங்க தடுக்க மாட்டோம். 2வது கோரிக்கையின்படி, நம் குடும்பத்தில் உள்ள எல்லாரும் 'ஆன்லைன்' வழியாக, திமுக வின், 'எல்லாரும் நம்முடன்' திட்டத்தில் இணைந்து விட்டோம். அதனால, நீ எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்கு வரவும்... இப்படிக்கு, பார்த்தசாரதி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்

காரணம்

அதாவது, திமுகவில் பெற்றோர் இணையவில்லை என்ற காரணத்துக்காக, மகள் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டது போலவும், அதனால், குடும்பத்தில் எல்லாரும் திமுகவில் சேர்ந்துட்டோம் என்பதை, "காணவில்லை" என்ற விளம்பரம் வாயிலாக, மகளுக்கு தெரியப்படுத்துவது போலவும் இது சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாடலிங்

ஆந்திர மாடலிங்

இதில்தான் 2 ஷாக் அடங்கி உள்ளது.. ஒன்று, இந்த விளம்பரத்தில் உள்ள, ஆந்திர மாடலிங் பெண்ணுக்கு இப்படி ஒரு விளம்பரம் வந்ததே தெரியாது.. தனக்கே தெரியாமல், தன் போட்டோ இப்படி பயன்படுத்தப்பட்டது கண்டு ஷாக் ஆகிவிட்டாராம்.. இப்படி ஒரு விளம்பரத்தில் நான் பங்கேற்கவில்லை... என் போட்டோவுடன் வந்த விளம்பரம், எந்த பத்திரிகையில் வந்திருக்கு என்பதுகூட எனக்கு தெரியாது.. இதை கண்டுபிடித்து, தகவல் சொன்னால், எனக்கு போலீசில் புகார் தர வசதியாக இருக்கும்' என்று அவரது முகநூல் பதிவில் போட்டுள்ளாராம்.

ஐபேக் நிறுவனம்

ஐபேக் நிறுவனம்

இந்த விளம்பரம் திமுகவின் தேர்தல் வியூகம் செய்த வேலையாக இருக்கும் என்கிறார்கள்.. ஐபேக் நிறுவனம்தான் இதை தயாரித்து, சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதா அல்லது வேறு கட்சிகளின் வேலையா என்ற, கேள்விகளும் எழுந்துள்ளது. "ஆன்லைனில் ஆள் பிடித்தால், இப்படியெல்லாம் பஞ்சாயத்துக்கள் வரத்தான் செய்யும்... உள்ளூரில் மாடலிங்குக்கு ஆள் கிடைக்காமல் ஆந்திராவில் இருந்துதான் விளம்பரத்துக்கு பெண்ணை அழைத்து வர வேண்டுமா" என்ற சலசலப்புகள் எழுந்து வருகிறது.

எடிட்டிங்

எடிட்டிங்

ஆனால், இந்த விளம்பரத்தை கண்டு திமுகவே ஷாக் ஆகியுள்ளதாம்.. "இப்படி ஒரு விளம்பரம் எந்த பேப்பரிலும் வரவில்லை.. தரவும் இல்லை.. இது முழுக்க முழுக்க போலியானது.. உள்நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டது.. ஏதோ ஒரு விளம்பரத்தை எடிட் செய்து இப்படி வதந்திகளை பரப்பி விடுகிறார்கள்.

பாரம்பரியம்

பாரம்பரியம்

எங்கள் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், பாஜக தரப்பினரே இப்படி ஒரு வேலையை செய்துள்ளார்கள்.. பாரம்பரியம் மிக்க கட்சி இது.. திமுகவுக்கு என்று ஒரு கண்ணியம் உள்ளது.. திமுகவுக்கு என்று வழிவகைகள் உள்ளபோது, இது போன்ற விளம்பர காரியங்களில் ஒருக்காலும் ஈடுபடாது" என்று திமுகவினர் கதறுகிறார்கள். உண்மையிலேயே இது போலியான விளம்பரம்தான்.. யார் செய்த வேலை என்றுதான் தெரியவில்லை.. எனினும் திமுக - பாஜகவின் நேரடி மோதல் ஆரம்பமாகி உள்ளது என்பது மட்டும் இதன்மூலம் தெரியவருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
A fake ADVT gives crisis to DMK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X