சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் போனி.. பதவி பறிபோன கோபம்.. திமுகவிற்கு தாவும் முக்கிய புள்ளி?.. அதிமுகவில் செம டென்சன்!

அதிமுகவை சேர்ந்த முக்கிய உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.மணிகண்டன் எப்போது வேண்டுமானாலும் அதிமுகவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.மணிகண்டன் எப்போது வேண்டுமானாலும் அதிமுகவில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

அதிமுக ஆட்சியை எப்போது நினைத்தாலும் கவிழ்க்க முடியும், 1 மணி நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாற தயார். ஆனால் கொல்லைப்புறமாக ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் பல மாதங்களாக சொல்லி வருகிறார்.

ஆனால் அப்போதெல்லாம் ஸ்டாலின் எதை வைத்து அப்படி பேசினார் என்று தெரியவில்லை. தற்போது முதல்முறையாக அதிமுகவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் திமுக பக்கம் தாவ வாய்ப்புள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

என்னது.. காசு இல்லையா... செல்பி எடுக்க வந்த தொண்டரை விரட்டிய வைகோ.. சலசலப்பு வீடியோ! என்னது.. காசு இல்லையா... செல்பி எடுக்க வந்த தொண்டரை விரட்டிய வைகோ.. சலசலப்பு வீடியோ!

யார்

யார்

அதிமுகவை சேர்ந்த முக்கிய உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.மணிகண்டன் 10 நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் திடீர் என்று நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றபின் இப்படி நீக்கப்படும் முதல் அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேபிள் கட்டணம்

கேபிள் கட்டணம்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கேபிள் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மன் உடுமலை ராதாகிருஷ்ணன் தன்னிச்சையாக முடிவு எடுத்தார். இவர் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்த எம்.மணிகண்டனிடம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சண்டை

என்ன சண்டை

இதனால் எம்.மணிகண்டன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் இருவருக்கும் இடையில் சண்டை வந்து இருக்கிறது. ஆனால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் மிகவும் நெருக்கமானவர். மாறாக எம்.மணிகண்டன் இவர்கள் இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இந்த நிலையில் எம்.மணிகண்டன் முதல்வர் பழனிச்சாமியிடம் சென்று இது தொடர்பாக முறையிட்டுள்ளார்.

எம்.மணிகண்டன் எப்படி

எம்.மணிகண்டன் எப்படி

ஆனால் எம்.மணிகண்டன் குற்றச்சாட்டை முதல்வர் தரப்பிலும் துணை முதல்வர் தரப்பிலும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கேபிள் விஷயம் எல்லாம் சாதாரண மேட்டர். இதை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் இது என் தன்மானம் சார்ந்தது என்று கூறி கோபம் அடைந்த எம்.மணிகண்டன் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வாக்குவாதம் செய்ததாக பேசிக்கொள்கிறார்கள்.

என்ன வாக்குவாதம்

என்ன வாக்குவாதம்

அதேபோல் முக்கிய அமைச்சர்கள் சிலரிடமும் இதை சொல்லி எம்.மணிகண்டன் வாக்குவாதம் செய்துள்ளார் என்கிறார்கள். இந்த சண்டையின் முடிவில்தான் எம்.மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் எம்.மணிகண்டன் கட்சியில் இருந்தே வெளியேற வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

திமுக வாய்ப்பு

திமுக வாய்ப்பு

எம்.மணிகண்டன் திமுகவில் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான சிலர் பேசிக்கொள்கிறார்கள். கட்சிக்குள் அவமானப்படுத்திவிட்டனர். அதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.மணிகண்டன் திமுவிற்கு செல்ல போகிறார் என்று பேசப்படுகிறது.

என்ன ஸ்டாலின்

என்ன ஸ்டாலின்

அதிமுகவில் இருந்து சிலர் திமுகவிற்கு வர தயார் என்று ஸ்டாலினும் இதை மனதில் வைத்துதான் பேசுகிறார். அதிமுகவில் உள்ள சில முக்கியஸ்தர்களை ஸ்டாலின் வெளியே இழுக்கு பேசி வருகிறார். அதில் முதல் போனிதான் எம்.மணிகண்டன் என்றும் கூறுகிறார்கள்.

English summary
A former minister may join in DMK party leaving AIADMK says Sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X