சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஐஐடியில் பயங்கர வேகத்தில் பரவும் கொரோனா.. ஒரே நாளில் மேலும் 79 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐஐடியில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    சென்னை: கொரோனா கிளஸ்டரானது ஐஐடி.. மேலும் 79 பேருக்கு தொற்று.. பெற்றோர் ஷாக்..!

    சென்னை ஐஐடியில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 32 இரண்டு பேருக்கும், நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு சென்னை ஐஐடி வளாகத்துக்குள் கொரோனா பரவியுள்ளது. ஆக மொத்தம் 104 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    A further 79 students in IIT Madras affected with coronavirus

    இந்த நிலையில், பரிசோதனை செய்யப்பட்டவர்களில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    11ஆம் தேதி 11 பேருக்கும், 12ஆம் தேதி 12 பேருக்கும், 13ம் தேதி 32 பேருக்கும் 14ம் தேதி 33 பேருக்கும் ஐஐடியில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை ஐஐடியில், 9 ஹாஸ்டல்கள் உள்ளன. மொத்தம் 778 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஊழியர்களோடு சேர்த்தால் மொத்தம் 900 பேர் ஐஐடி வளாகத்தில் உள்ளனர். இது ஒரு கொரோனா கிளஸ்டராக மாறியுள்ள போதிலும், கோயம்பேடு கிளஸ்டரை போல, இங்கு கட்டுப்படுத்துவதில் சிரமம் இருக்காது என்கிறார்கள் அதிகாரிகள். ஏனெனில், இங்கே யார் இருக்கிறார்கள், யார் எங்கே போனார்கள் என்பதற்கான விவரம் இருப்பதால், கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார்கள்.

    கடந்த 11ம் தேதி முதலே ஐஐடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. அங்குள்ள மெஸ் மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்துதான் கொரோனா பெருமளவு பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A further 79 people at IIT Madras have been confirmed to have corona infection today. As a result, the number of corona victims at IITs has risen to 183.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X