சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திலும் துணை முதல்வர் பதவி... கூட்டணி அரசு.. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திலும் துணை முதல்வர் பதவி. மீண்டும் வெல்ல தடாலடி வியூகம்

    சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களுடன் களத்துக்கு தயாராகி வருகின்றன. இதில் எப்படியாவது மீண்டும் வெல்ல வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிக்கு துணை முதல்வர் பதவியை கூட தர தயாராக இருக்கிறதாம் ஆளும் தரப்பு.

    இந்திய அரசியலில் இப்போது துணை முதல்வர் பதவி என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழகத்தில் துணை முதல்வர் என்கிற அத்தியாயமே குடும்ப அரசியலை சரிகட்ட தொடங்கி வைக்கப்பட்டது.

    மத்தியில் அண்ணன் அமைச்சராகிவிட்டதால் தாம் மாநில அமைச்சராக மட்டுமே இருக்க முடியாது என போர்க்கொடி தூக்கினார் தம்பி. இதனால் தமிழகத்தில் முதல் முறையாக துணை முதல்வர் பதவி தரப்பட்டது.

    து.மு. பதவி

    து.மு. பதவி

    இத்தனைக்கும் அரசியல் சாசனப்படி துணை முதல்வர் பதவி அப்படி ஒன்றும் முக்கியமானது அல்ல. ஆனால் சூழ்நிலையை சமாளிப்பதற்காக மட்டும் இந்த பதவிகள் தரப்பட்டு வருகின்றன.

    உட்கட்சி பூசலை எதிர்கொள்ள

    உட்கட்சி பூசலை எதிர்கொள்ள

    ஆளும் கட்சியில் தர்ம யுத்தம் வெடித்து ஆட்சிக்கே ஆபத்து என்கிற நிலை ஏற்பட்டது. பின்னர் சமாதான பேச்சுவார்த்தைகளின் போது உட்கட்சி பூசலை சமாளிக்க துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.

    ஆந்திரா, கர்நாடகாவில்..

    ஆந்திரா, கர்நாடகாவில்..

    ஆந்திராவில் ஜாதிவாரியாக துணை முதல்வர்கள் பதவி தரப்பட்டது. கர்நாடகாவில் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.

    துணை முதல்வர்கள் பதவி

    துணை முதல்வர்கள் பதவி

    இதேபாணி வட இந்திய மாநிலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கூட அரசுக்கு ஆபத்து நேராமல் இருக்க துணை முதல்வர்கள் பதவி தரப்படலாம் என்கிற கருத்து நிலவுகிறது.

    கூட்டணிக்கான வியூகம்

    கூட்டணிக்கான வியூகம்

    இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் வெல்வதற்காக ஆளும் கட்சியானது துணை முதல்வர் பதவி, கூட்டணி அரசு என்கிற முழக்கங்களை ஏற்கவும் தயாராகிவிட்டதாம். முதல்வர் பதவி கனவு கிடைக்காமல் ஏங்கி கிடக்கும் தமது கூட்டணி கட்சிக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என்பது ஆளும் தரப்பின் கணக்கு.

    புதிய சகாப்தம்

    புதிய சகாப்தம்

    இப்படி துணை முதல்வர் பதவி, கூட்டணி அரசு என்கிற வாக்குறுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையும் ஆளும் தரப்பின் கூட்டணி கட்சிக்கு இருக்கிறதாம். இதனால் வரும் சட்டசபை தேர்தல் தனித்தே ஆட்சியா? கூட்டணி அரசுக்கான சகாப்தமா? என்கிற களமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    A political gossip on the Tamilnadu Politics here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X