சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியை விமர்சித்த சீமான்..வீடியோ

    சென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து வருகிறது.

    காஷ்மீர் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் பிரிவினையை ஆதரித்தார்.

    ரஜினி தனது பேச்சில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள், என்றார்.

    என்ன

    என்ன

    அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அமித் ஷா யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்கும். காஷ்மீர் மிஷன் சக்ஸஸ் என்று சந்தோஷமாக ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

    என்ன பதிலடி

    என்ன பதிலடி

    இதற்கு நாம் தமிழர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ரஜினி சொல்வது எல்லாம் சரிதான். இந்த கிருஷ்ணரும், அர்ஜுனரும் யார் மீது போர் தொடுக்க போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. நீங்கள் அவதாரங்களாக அப்புறம் இருங்கள். முதலில் நல்ல மனிதர்களாக இருங்கள். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.

    என்ன கோபம்

    என்ன கோபம்

    இதனால் கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள் நேற்று இரவில் இருந்து சீமானுக்கு எதிராக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சீமானை மிக மோசமாக திட்டியும், நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ரஜினி ரசிகர்கள் பலர் இப்படி சண்டையில் இறங்கி டிவிட் செய்து வருகிறார்கள்.

    நாம் தமிழர் பதிலடி

    நாம் தமிழர் பதிலடி

    இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஜினி காஷ்மீர் விஷயத்தில் எடுத்த நிலைப்பாடு ஏன் தவறு, அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியினர் புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ரஜினி பாஜகவுடன் ஐக்கியமாகிவிட்டார் என்று கடுமையான விமர்சனங்களை அவர் மீது நாம் தமிழர் கட்சியினர் வைத்து வருகின்றனர்.

    பெரிய சண்டை

    பெரிய சண்டை

    இதனால் தற்போது சமூக வலைதளமே ரஜினி சீமான் ஆதரவாளர்களுக்கு இடையிலான சண்டையாக மாறி இருக்கிறது. ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசி பெரிய போர்க்களம் போல ஆகி உள்ளது. இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இப்படி சண்டை வருவது இது முதல்முறை கிடையாது, இதற்கு முன் பலமுறை இப்படி நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    A huge fight between Seeman and Rajinikanth supporters in Social Media on Kashmir Issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X