சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்காவது ஒருத்தர் 5 கட்சி, 7 சின்னத்தில் போட்டியிட்டிருப்பார்களா? ... இவர்தான் திருநாவுக்கரசர்!

திருநாவுக்கரசர் இதுவரை சென்று வந்த அரசியல் கட்சிகளும், போட்டியிட்ட சின்னங்களும்

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Candidates List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    சென்னை: "ஏழாவதா வாக்கப்பட்டுட்டு என்னா ஒரு பேச்சு" என்று வடிவேலு படத்தில் வருவதைபோலதான் திருநாவுக்கரசையும் பார்த்து கேட்க தோன்றுகிறது.

    அரசியலின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். எம்ஜிஆரின் ஆட்சியில் துணை சபாநாயகர், வீட்டு வசதித்துறை அமைச்சர் என தன்னை நிலைநிறுத்தி கொண்டவர்.

    அறந்தாங்கி தொகுதியில் எந்த வீட்டில் நல்லது, கெட்டது என்றாலும் அங்கே திருநாவுக்கரசர் இருப்பார். அந்த அளவுக்கு தொகுதி மக்களுடன் நெருக்கம், இணக்கம்!

    உங்க மேல தப்பு இருக்கு.. பதவி விலகிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. கமலின் அடேங்கப்பா திட்டம்!உங்க மேல தப்பு இருக்கு.. பதவி விலகிட்டு இடத்தை காலி பண்ணுங்க.. கமலின் அடேங்கப்பா திட்டம்!

    ஒதுக்கி வைத்த ஜெ.,

    ஒதுக்கி வைத்த ஜெ.,

    எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி இரண்டாக ஆனபோது, ஜானகி அணியைவிட ஜெ.அணிக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு வழிகாட்டியவர்களிலும், வெற்றி பெற வைத்தவர்களிலும் இவரும் ஒருவர்! ஆனால் ஜெயலலிதா அசுர வளர்ச்சி பெறவும், அவருடன் சரியான ஒத்துழைப்பை திருநாவுக்கரசால் தர முடியவில்லை. காரணம், ஜெயலலிதாவே இவரை ஒதுக்க ஆரம்பித்து விட்டார்.

    தவிர்க்க முடியாத நபர்

    தவிர்க்க முடியாத நபர்

    தனித்து விடப்பட்ட திருநாவுக்கரசர் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக் கட்சி கண்டார், தத்தளித்தார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓரளவுக்கு வெற்றியை பெற்றாலும், முழு பலத்துடன், தவிர்க்க முடியாத நபராக இவரால் வளர முடியவில்லை. ஆனால் இவரால் அவரது ஆதரவாளர்கள்தான் வளர்ந்தார்கள்!

    1952 முதல் இதுவரை.. லோக்சபா தேர்தல் தகவல் அனைத்தும் இங்கே

    பாஜக

    பாஜக

    அப்போதுதான் கட்சி தாவலை கையில் எடுத்தார். 1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அடுத்த ஆண்டே நடைபெற்ற எம்பி தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்தார். இதற்கு பிறகு தனது எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்து கொண்டார்.

    சரிக்கட்டும் காங்கிரஸ்

    சரிக்கட்டும் காங்கிரஸ்

    திரும்பவும் அடுத்த சில ஆண்டுகளிலேயே பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். அங்கேயும் ஈவிகேஎஸ்ஸுடன் குடுமிப்பிடி சண்டை. தாக்கு பிடிக்க முடியவில்லை. தலைவர் பதவி பறிக்கப்பட்டதும் அதிர்ச்சியடைந்தார். இப்போது, அவரை தக்கவைத்துக்கொள்ள சீட் கொடுத்து சரிக்கட்டி இருக்கிறது காங்கிரஸ் தலைமை! திருநாவுக்கரசர் சென்று வந்த கட்சிகளும், சின்னங்களும் இவைதான்:

    போட்டியிட்ட தேர்தல்கள்

    1977 - அறந்தாங்கி - இரட்டை இலை
    1980- அறந்தாங்கி - இரட்டை இலை
    1984- இரட்டை இலை
    1989 - ஜெ.அணியில் = சேவல் சின்னம்
    1991 - அறந்தாங்கியில் குடை சின்னம் (திமுகவுடன் கூட்டணி)
    1996 - அதிமுகவில் இணைந்து இரட்டை இலையில் அறந்தாங்கியில் போட்டி வெற்றி.
    1998 - புதுக்கோட்டை - மாம்பழம் சின்னம் (காங்கிரசுடன் கூட்டணி)
    1999 - லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக புதுக்கோட்டையில் வெற்றி - மோதிரம் (திமுகவுடன் கூட்டணி வைத்து)
    2009ல் - பாஜக வேட்பாளராக ராமநாதபுரத்தில் தாமரை தோல்வி.
    2019 - கை சின்னத்தில் திருச்சியில் போட்டி.

      7 சின்னங்களா?

      7 சின்னங்களா?

      எங்காவது ஒருத்தர் 5 கட்சி, 7 சின்னத்தில் போட்டியிட்டிருப்பார்களா? ஆக... கட்சி தாவலுக்கு தமிழகத்திலேயே முன்னுதாரணமாக இருப்பவர்தான் திருநாவுக்கரசர். இப்படி கட்சிக்கு கட்சி தாவிக் கொண்டிருந்தால், இவரது ஆதரவாளர்களே என்ன நினைப்பார்கள்? தாவிக் கொண்டே இருப்பதால், அந்தக் கட்சியின் கொள்கை ரீதியாக இவரால் உடனடியாக ஒன்றி போக முடிவதில்லை. நிலையாக ஐக்கியம் ஆகவும் முடிவதில்லை.

      ஜெயிக்க முடியவில்லை

      ஜெயிக்க முடியவில்லை

      இன்று திருச்சியில் போட்டியிடும் திருநாவுக்கரசர் மீது எந்த குறைகளையும் கறைகளையும், எதிர்க்கட்சிகள் சொல்லி ஓட்டு கேட்க தேவையில்லை... தாவி வந்த 5 கட்சியும், 5 சின்னமுமே அவருக்கு எதிரியாக முன்னின்று வரிசை கட்டி நிற்கிறது. ஆனால் ஒன்று, இவர் நின்றும் கூட தமிழகத்தில் தாமரை ஜெயிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் நின்று தோல்வியே காணாத தலைவரான திருநாவுக்கரசருக்கு அது ஒன்று மட்டுமே ஒரே தேர்தல் தோல்வியும் கூட என்பது கூடுதல் சுவாரஸ்யமானது.

      English summary
      Thirunavukarasar has joined in 5 parties so far. He has contested 7 symbols in the elections. Now he is contesting on behalf of Congress in Trichy Constitution.
       
       
       
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X