சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் நடிகர் விமலின் மனைவிக்கு சீட்?.. ஸ்டாலினுக்கு எதிர்ப்பு கடிதம்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விமலின் மனைவி திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விமல் மீது மோசடி புகார் கூறி தஞ்சாவூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறுயிருக்கையில் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரில் வசித்து வருகிறேன்.

பட்டுக்கோட்டையில் தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அப்போது நடிகர் விமலுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மன்னர் வகையறா என்ற படத்தை தயாரிக்க என்னிடம் 50 லட்சம் கேட்டார் விமல்.

ராஜமாதான்னு சும்மாவெல்லாம் சொல்லலை... சசிகலா போட்டிருக்கும் பிளானே 'அதகள' லெவலாம் ராஜமாதான்னு சும்மாவெல்லாம் சொல்லலை... சசிகலா போட்டிருக்கும் பிளானே 'அதகள' லெவலாம்

பணம் கொடுத்த தியேட்டர் குத்தகைதாரர்

பணம் கொடுத்த தியேட்டர் குத்தகைதாரர்

வீட்டை அடமானம் வைத்து நான் அவருக்கு பணம் கொடுத்தேன். அதற்காக எனக்கு 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் விமல் சொன்ன தேதியில் வங்கி காசோலை செலுத்தினேன். அப்போது பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது.

மணப்பாறை

மணப்பாறை

இதுகுறித்து பல முறை விமலிடம் முறையிட்ட போதும் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. என் வீட்டை விற்று விமலுக்காக நான் பெற்ற கடனை அடைத்தேன். விமலுக்கு உதவ போய் நான் தற்போது நடுத்தெருவில் நிற்கிறேன். இந்த நிலையில் திமுக சார்பில் விமலின் மனைவி மணப்பாறையில் போட்டியிட போவதாக தகவல் அறிந்தேன்.

விடியல் தரப் போறாரு

விடியல் தரப் போறாரு

ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு என என்னைப் போன்றவர்கள் நம்பியுள்ள நிலையில் மோசடியின் மொத்த உருவமான விமலுக்காக அவரது மனைவிக்கு சீட் கொடுப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என அந்த கடிதத்தில் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

நியாயம்

நியாயம்

இந்த கடிதத்தை பார்த்துவிட்டு ஸ்டாலின் என்ன முடிவு எடுக்க போகிறார் என தெரியவில்லை. ஒரு வேளை இரு தரப்பு நியாயத்தையும் பார்த்து முடிவு எடுப்பாரா இல்லை, எதற்கு வம்பு என நினைத்து விமலின் மனைவிக்கு பதிலாக வேறு யாருக்காவது சீட் தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
One writes to Stalin against giving seat for Actor Vimal's wife in upcoming election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X