17 வயது சிறுமி.. மிரட்டி மிரட்டி பலாத்காரம்... 40 வயது மாமா கைது
சிறுமியை கற்பழித்த நபர் போஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை: 17 வயது சிறுமியை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டு பலமுறை அந்த பெண்ணை மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்து வந்த 40 வயது நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஓட்டேரி, எஸ்.எஸ். புரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். அதனால் வீட்டு வேலை செய்து சம்பாதிக்கும் நிலைக்கு ஆளானார்.

ஏசி மெக்கானிக்
இந்நிலையில் அண்ணாசாலையில் வசித்து வரும் விஜயகுமார் என்பவர் சிறுமியின் மாமாவாம்.. அதாவது சிறுமியின் அம்மாவுக்கு தம்பி முறையாம். இவர் ஏசி மெக்கானிக்காக உள்ளார். மாமா என்ற உரிமையில் அடிக்கடி வீட்டுக்கு அடிக்கடி வர போக இருந்துள்ளார். அப்போதுதான் சிறுமிக்கும் அந்த மாமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

செல்போனில் படம்
இந்நிலையில், கடந்தசில மாதங்களுக்கு இப்படித்தான் மாமா வீட்டுக்கு வரும்போது, சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் தந்திருக்கிறார். இது தெரியாத சிறுமியும் அதை வாங்கி குடித்து மயங்கிவிட்டார். அந்த நேரத்தில்தான் அந்த கொடூரன் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை சீரழித்தது இல்லாமல் அதை தனது செல்போனிலும் படம் பிடித்து எடுத்து வைத்து கொண்டார்.

மிரட்டி மிரட்டியே...
பிறகு வீட்டுக்கு எப்போதெல்லாம் அந்த மாமா வருகிறாரோ அப்போதெல்லாம் சிறுமிக்கு இந்த வீடியோவை காட்டி காட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இப்படியே மிரட்டி மிரட்டி காரியத்தை சாதித்த மாமாவை பற்றி சிறுமியால் வீட்டில் சொல்ல துணிவில்லை. இதனிடையேதான் திடீரென சிறுமி வீட்டில் மயங்கி கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு போனால், சிறுமி கர்ப்பம் என்று கூறினார்கள்.

வெளுத்து வாங்கினர்
இதன்பிறகுதான் சிறுமி பயந்து பயந்து விஷயத்தை கூற, ஆத்திரமடைந்த பெற்றோர் விஜயகுமாரை வீட்டுக்கு வரவழைத்து அடித்து துவைத்து வெளுத்தனர். கூடவே கீழ்ப்பாக்கம் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, விஜயகுமாரை கைது செய்து, அவரது செல்போனையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

கொள்ளை ஆசை
அப்போது விசாரணையில் விஜயகுமார் கூறும்போது, "சிறுமி மீது எனக்கு கொள்ளை ஆசை. அதனால்தான் ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை கற்பழித்தேன்" என்று வாக்குமூலம் தந்தார். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications