சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போயும் போயும் கூவம்தான் கிடைச்சதா.. பட்டப் பகலில் பரபரத்த நேப்பியர் பாலம்.. வெளியான வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: நேப்பியர் பாலத்திற்கு அடியில் கூவம் ஆற்றில் இன்று மதியம் நடந்த சம்பவம் பற்றிதான் இப்போது தீயணைப்பு துறை முழுக்க பேச்சாக இருக்கிறது.

Recommended Video

    போயும் போயும் கூவம்தான் கிடைச்சதா.. பட்டப் பகலில் பரபரத்த நேப்பியர் பாலம்.. வெளியான வீடியோ

    அப்படி என்ன நடந்தது என்கிறீர்களா.. சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதிக்குள் ஒருவர் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் குதித்துள்ளார். தற்கொலை செய்ய முயன்ற அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

    சேறும், சகதியுமாக அவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    பரபரப்பான நேப்பியர் பாலம்

    பரபரப்பான நேப்பியர் பாலம்

    சென்னை கடற்கரை சாலையிலுள்ள நேப்பியர் பாலம்.. வழக்கம்போல இன்றும் சற்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. பலரும் நடந்தபடி அந்த பகுதியை கடந்த மாதிரிதான், மதியம் 12 மணியளவில் ஒரு நபரும், அந்த பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆனால், அதற்கு பிறகுதான் விபரீதம் நடந்தது.

    கூவத்தில் குதித்தார்

    கூவத்தில் குதித்தார்

    என்ன நினைத்தாரோ, பாலத்தின் அருகே போய் நின்றவர், திடீரென கூவத்தில் குதித்து விட்டார். மேலிருந்து கீழே குதித்த நபர் கூவம் ஆற்றின் சேறு, சகதியில் சிக்கி கத்த ஆரம்பித்தார். இதை அங்கே நடந்து போன மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

     பதறிய மக்கள்

    பதறிய மக்கள்

    உடனடியாக, பயந்து போய், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர், மீட்புப் பணிக்காக திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினரை உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

    உடம்பெல்லாம் சேறு

    உடம்பெல்லாம் சேறு

    சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை காவல்துறையினர் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர். உடம்பெல்லாம் சேறும், சகதியுமாக அந்த நபர் கயிற்றை பிடித்தபடியே மேலே தூக்கி விடப்பட்டார். இந்த வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது.

    விசாரணை

    விசாரணை

    இதன்பிறகு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணையில் நேப்பியர் பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர் ராயபுரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (37) என்பது தெரியவந்துள்ளது. தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். இப்படி ஒரு நாற்றம்பிடித்த சகதிக்குள் போய் தற்கொலை செய்ய முயன்றுள்ளாரே இந்த மனிதன் என்று பார்ப்போரையெல்லாம் உச்சு கொட்ட வைத்துள்ளது இந்த சம்பவம்.

    English summary
    Unexpectedly, someone jumps into the Coovam river, which runs down the drain. He was rescued by firefighters who tried to commit suicide. The video of him being rescued by firefighters in the mud and debris has now been released.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X