சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க வந்தா மட்டும் போதாது!.. மோடிக்கு ஓட்டும் போடணும்!!.. கலகலக்க வைக்கும் மணவீட்டாரின் கோரிக்கை!!

Google Oneindia Tamil News

சென்னை: குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் ஒரு திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு வோட்டு போட வேண்டும் என அன்பு கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்காக சிலர் இப்போதே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தல் பிரசாரம் என்பது மேடை அமைத்து, மைக்கில் சொல்வது, துண்டுபிரசுரங்களை வெளியிடுவது என்று இருக்கும். என்னதான் ஒரு கட்சியின் அபிமானியாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தான் சார்ந்த கட்சிக்கு ஓட்டு போடுமாறு கேட்பதுதான் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் பணியாக இருக்கும்.

திருமண பத்திரிகை

திருமண பத்திரிகை

ஆனால் இங்கு குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜெய்சிங்கானி குடும்பத்தினர் வீட்டு திருமண அழைப்பிதழில் வித்தியாசமான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பத்திரிகைகளில் கிப்ட் கொண்டு வர வேண்டாம், பந்துக்களுடன் வரவும் உள்ளிட்டவைதான் இடம் பெற்றிருக்கும்.

கோரிக்கை

கோரிக்கை

ஆனால் ஜெய்சிங்கானி வீட்டு திருமண பத்திரிகையில் வரும் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். அதுதான் புதுமணத் தம்பதிக்கு கொடுக்கும் பரிசாக இருக்க முடியும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வாக்கு சேகரிக்க

வாக்கு சேகரிக்க

குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அந்த வகையில் ஜெய்சிங்கானி குடும்பத்தினர் இன்ம்பிரஸ் ஆகி இதுபோல் கூறியிருக்கலாம். இல்லாவிட்டால் ஜெய்சிங்கானி குடும்பத்தினர் பக்கா பாஜகவினராக இருக்கலாம். அதனால்தான் இப்போதே வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர்.

நல்ல காலம்

நல்ல காலம்

நல்லவேளை வடிவேல் காமெடியில் வருவதை போல் பாஜகவுக்குத்தான் வாக்களித்தனரா என்பதை சரி பார்க்க வாக்குச் சீட்டை எங்களிடம் காண்பிக்க வேண்டும் என கூறாமல் விட்டனரே.

English summary
Marriage invitaion from Surat demands to vote for Modi in 2019 Loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X