சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவிலிருந்து இந்திய கலாச்சாரத்துக்காக துடிக்கும் ஒரு இதயம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நவராத்திரி கொண்டாட்டம்! உங்கள் வீட்டு கொலு புகைப்படங்கள்,வீடியோக்களை அனுப்புங்கள்

    சென்னை: அமெரிக்காவில் வசித்து வருகிறார் பிரியா மணிகண்டன். ஆனால் அவரது இதயம் நமது கலாச்சாரத்திற்காக மட்டுமே துடித்துக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழகத்தைச் சேர்ந்த பிரியா மணிகண்டன், இந்திய கலாச்சாரத்தின் மீது அதீத பிரியமும், பற்றும் கொண்டவர்.

    1998ம் ஆண்டே அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் பிரியா மணிகண்டன். ஆனாலும் தமிழ்நாடு மற்றும் இந்திய கலாச்சாரத்தின் மீதான பற்று அவரை விட்டுப் போய் விடவில்லை. ரத்தத்தில் கலந்ததல்லவா அவை!.

    பிரியா மணிகண்டனின் பெற்றோருக்கு பூர்வீகம் பூம்புகார் அருகே உள்ள மேலையூர். சைவை வரலாறு குறித்த நூல்களை எழுதியுள்ளார் பிரியா மணிகண்டனின் தந்தை ராஜசேகரன்.

    சிறு வயது முதலே சைவப் பற்று

    சிறு வயது முதலே சைவப் பற்று

    குடும்பச் சூழல், தந்தையின் சைவை பற்று ஆகியவை காரணமாக, சிறு வயதிலேயே 63 நாயன்மார்கள் குறித்தும், சிலப்பதிகாரம் குறித்தும் கற்கும் சூழலில்தான் பிரியா மணிகண்டன் வளர்ந்து வந்தார். பிரியா மணிகண்டன் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் கூட இதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    கான்செப்ட் வைத்து கொலு

    கான்செப்ட் வைத்து கொலு

    கற்றதை சும்மா விடாமல் அதை வைத்து நவராத்திரி சமயத்தில் கொலுவின் மூலமாக வெளிப்படுத்துவது பிரியா மணிகண்டனின் வழக்கம். ஒவ்வொரு கொலுவின்போதும் ஒரு கான்செப்ட் வைத்து கொலு வைப்பது அவரது வழக்கம்.

    கொலு ஐடியாக்கள்

    கொலு ஐடியாக்கள்

    பிரியா மணிகண்டனுக்கு அவரது கணவர் மணிகண்டன், குடும்பத்தினர் பெரும் உற்சாகம் தருகிறார்கள். கொலு ஐடியாக்களைக் கொடுக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து அந்த கொலுவை சிறப்பிப்பது குறித்து விவாதிப்பது தவறாமல் நடக்குமாம்.

    அன்பு சகோதரி

    அன்பு சகோதரி

    பாரதி மணிகண்டனின் சகோதரி பாரதி பிரதீஷ் இதில் முக்கியப் பங்கு வகிகிறார். அதாவது, தான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் தனது சகோதரிக்காக விதம் விதமான பொம்மைகளை வாங்கி வருவாராம் (நமக்கு பிரியா மணிகண்டன் குறித்த தகவல்களைக் கொடுத்து உதவியது பாரதிதான்)

    சென்னையில் நவராத்திரி கொண்டாட்டம்

    சென்னையில் நவராத்திரி கொண்டாட்டம்

    நவராத்திரி சமயத்தில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி நகர வீதிகளை வலம் வர வேண்டும் என்பது பிரியா மணிகண்டன், பாரதி குடும்பத்தினரின் விருப்பமாக இருந்ததாம். கடந்த ஆண்டு இந்த ஆசை நிறைவேறியதாம். நவராத்திரி விழாவை நேரடியாகவே அனுபவித்து மகிழ்ந்தனராம்.

    பாராட்டப்பட வேண்டியவர்

    பாராட்டப்பட வேண்டியவர்

    உண்மையில் வெளிநாடுகளுக்குப் போய் விட்டவர்கள் பலரும் நமது கலாச்சாரத்தைப் பற்றிய ஏக்கத்தில் உள்ளனர். அதைக் காக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடத்தில்தான் அதிகம் இருக்கிறது. தூரத்தில் இருக்கும்போதுதான் ஒரு பொருளின் அருமை தெரியும் என்பார்கள். ஆனால் பிரியா மணிகண்டன், சிறு வயது முதலே இந்திய கலாச்சாரச்சாரத்தை சுவாசித்து வளரந்தவர் என்பதால் அதன் அருமையை அருமையாக பாதுகாத்து வருகிறார். பாராட்டப்பட வேண்டியவர்தான் பிரியா மணிகண்டன்.

    பிரியா - பாரதி சகோதரிகள்

    பிரியா - பாரதி சகோதரிகள்

    கைலசநாதர் மலை, சங்க இலக்கியம், இன்கன் கலாச்சாரம் (மச்சு பிச்சு), நயாகரா நீர்வீழ்ச்சி ஆகியவற்றை டாப்பிக்காக வைத்து முந்தைய கொலுக்களை செய்துள்ளார் பிரியா மணிகண்டன். கடல் கடந்து சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்காத பிரியா மணிகண்டனை நிச்சயம் பாராட்டலாம். அதை விட முக்கியமாக தனது சகோதரியின் திறமையை நம்மிடம் பகிர்ந்து அவரை ஊக்கப்படுத்த விரும்பிய பாரதி பிரதீஷையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.

    English summary
    US based Tamil Nadu woman Priya Manikanda is an ardent lover of Indian culture and always respect the values. Here is a story on her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X