சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடியா ஓடியா...ஒரே ரேட்..பிக்ஸ் பண்ணியாச்சு...ஒரு சீட் ரூ10 கோடி.. கல்லா பொட்டியை திறந்த 'சிங்காரம்'

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் களத்தில் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்த வேண்டும் என்பதை கட்சி தலைமைகளுக்கு சொல்லியா தர வேண்டும்.. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் போதே இப்போதே ஒரு சீட்டுக்கு ரூ10 கோடி என வசூலிக்க தொடங்கிவிட்டார்களாம்.

சென்னை பெருநகரத்தின் தெருக்களில் அப்படியே உலா வந்து கொண்டிருந்தது நம்ம வாகனம். அந்த இடத்துக்கு வந்த போது அந்த கூட்டம் எந்த கூட்டம் எதுவும் இல்லாமல் தென்மாவட்ட வண்டிகள் ஏகமாக இருக்கிறதே.. என யோசித்த படி விசாரித்தோம். அப்பத்தான் சீட் ரேட் விவகாரமே தெரிய வந்தது.

ஒரே ரேட் ரூ10 கோடி

ஒரே ரேட் ரூ10 கோடி

கட்சிக்கு உழைச்சாலும் உழைக்காவிட்டாலும் சரி.. ஆந்திராவில் கந்துவட்டி தொழில் செய்தாலும் சரி தலைமைக்கு ரூ10 கோடி கொடுக்க ரெடியா.. பொட்டியை இங்கிட்டு நீட்டிவிட்டு சீட்டை கன்பார்ம் பண்ணிகிட்டு போய்கிட்டே இருக்கலாம் என சிக்னல் கொடுத்துவிட்டார்களாம்.

மலையேறியது அந்த காலம்

மலையேறியது அந்த காலம்

அப்படி ரூ10 கோடியுடன் வலம் வந்த தென்மாவட்டத்து புது பணக்காரர்தான் நம் கண்ணில் பட்டவரும்கூட. அப்ப கட்சிக்கு உழைச்சவங்களுக்கு எல்லாம் சீட் கிடைக்காதா? என்றால் ஏங்க எந்த காலத்துல இருக்கீங்க? அப்படியே உழைச்சவங்களுக்கு சீட் கொடுத்தால் கட்சி தலைமைதானே செலவுக்கும் பணம் கொடுக்கனும். அப்படித்தானே நினைக்கிறீங்க? என்றார்கள்.

 இப்படித்தான் பார்முலா

இப்படித்தான் பார்முலா

கடந்த காலங்களில் அப்படித்தானே கழகத்தின் பார்முலா என்றால் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். ஆமாம் விவரம் தெரியாத ஆள் என ஏகடியம் பேசுகிறார்கள். இப்பவெல்லாம் கட்சிக்கு ரூ10 கோடி, மாவட்டத்துக்கு இத்தனை கோடி, ஒன்றியத்துக்கு இத்தனை லட்சம் என கல்லா கட்டிவிட்டுத்தான் வேட்பாளராக முடியுமாம். இதனால் ஒ.செ.க்களும் படு உற்சாகமாக இருக்கிறார்களாம்.

காலத்தே கல்லா நிரம்புதல்

காலத்தே கல்லா நிரம்புதல்

ஜெயிக்கிறது தோற்கிறது எல்லாம் அரசியலில் சகஜம்.. கல்லா பெட்டி காலத்தே நிரம்புதா என்பதுதான் கண்ணாக இருக்க வேண்டும் என்று கருத்து கண்ணாயிரங்களாக கதைத்துவிட்டு நகருகின்றனர் சிங்கள் டீ குடித்துவிட்டு தேர்தல் வேலை பார்த்த காலம் இப்ப எங்க இருக்குது?

English summary
A new Gossip on the Tamilnadu Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X