"அதை" தொட கூடாது.. என்னங்க இது.. வெளியே வந்தாலும் வந்தார்.. எல்லா பக்கமெல்லாம் சசிகலாவுக்கு சிக்கல்!
சென்னை: ஜெயலலிதா இறந்து இத்தனை வருடம் கழித்து, புது சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளது... இது சசிகலா உட்பட மொத்த அமமுகவுக்கும் பெருத்த இடியாய் வந்து விழுந்துள்ளது.
பெங்களூருவிலிருந்து சென்னைக்கு சசிகலா வந்தார் இல்லையா, அன்னைக்கு ஜெயலலிதா பயன்படுத்திய காரில்தான் கிளம்பி இருக்கிறார்..
அப்போது மட்டுமல்ல, அவர் டிஸ்சார்ஜ் ஆகி ஆஸ்பத்திரியில் இருந்து சென்றபோதும், இப்படித்தான் ஜெ.காரை பயன்படுத்தினார்.

சென்னை
சென்னைக்கு சசிகலா வந்த அன்று, அவரை வரவேற்கும் வகையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான கார்களும் இடம் பெற்றிருந்தனவாம்.. இதுதான் சிக்கலை கிளப்பி உள்ளது. ஜெயலலிதா பெயரில் டாட்டா- சியரா, மாருதி 800, மாருதி ஜிப்சி, டிராக்ஸ் ஜீப், ஸ்வராஜ் மஸ்தா வேன் கண்டசா, டிராக்ஸ் ஜீப், ஸ்வராஜ் மஸ்தா வேன் ஆகிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சசிகலா
இவற்றை பல்வேறு வேட்பு மனுக்களிலும் அவரே குறிப்பிட்டிருந்தார். அதேபோல, ஜெயா பப்ளிகேஷன்ஸ், "நமது எம்ஜிஆர்", ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ், மெட்டல் கிங், அதிமுக ஆபீஸ் பெயர்களில் உள்ள ஏராளமான வாகனங்களிலும், ஜெயலலிதாவுக்கும் பங்கு இருந்தது. இந்த வாகனங்களில் ஒன்றில்தான் சசிகலா வந்தாராம். எனவே, ஜெயலலிதா பயன்படுத்திய வாகனங்களை இனி யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் அப்படி பயன்படுத்தினால் சட்ட விரோதம் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன..!

ஒப்புதல் கடிதம்
ஆனால், இதுகுறித்து வேறு ஒரு தகவலும் வெளிவருகிறது.. அதாவது, மோட்டார் வாகனச்சட்டப்படி, ஒருவர் இறந்தபிறகு, அவர் பெயரில் உள்ள வாகனங்களை, 3 மாசத்துக்குள் அவர்களுடைய வாரிசுதாரருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டுமாம்.. ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால், அதற்கான ஒப்புதல் கடிதத்தை பிறரிடம் பெற வேண்டுமாம்.. ஒருவேளை அப்படி பெயர் மாற்றம் செய்யப்படவில்லையானால், அந்த வாகனத்தை பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்டப்படி சட்டவிரோதம் ஆகும்.. இதுதான் விதி.

பங்குதாரர்
ஆனால், சசிகலாவை வரவேற்ற வாகனங்கள் எதுவும் ஜெயலலிதாவின் பெயரில் இல்லை, மாறாக அது ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது... அந்த நிறுவனத்தில்தான் சசிகலாவும் ஒரு பங்குதாரர் என்பதால், அந்த வண்டிகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்..

நடவடிக்கை
இதையடுத்து, ஜெயலலிதா பெயரில் உள்ள மற்ற வாகனங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன? அவை வழக்கம்போல் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது... ஒருவேளை சசிகலாவோ, அவருடைய குடும்பத்தினரோ, ஜெயலலிதா பெயரில் உள்ள வாகனங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

குழப்பம்
சசிகலா தீவிரமான அரசியலில் இறங்கும் நேரத்தில், அதிமுகவை கைப்பற்ற போவதாக முடிவில் உள்ள நேரத்தில், நான்தான் பொதுச்செயலாளர் என்பதை சொல்லாமல் சொல்லி சென்னை வந்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் காரை பயன்படுத்தும் விஷயத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது..!