சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வில்லேஜ் விஞ்ஞானிகளின்" சூப்பர் கண்டுபிடிப்பு.. வெட்டுக்கிளியை விரட்ட.. "டமடம" மெஷின்.. செம ஐடியா!

Google Oneindia Tamil News

சென்னை: வெட்டுக்கிளிகளா விரட்டி அடிக்க புத்திசாலித்தனமாக புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

Recommended Video

    வெட்டுக்கிளியை விரட்ட வில்லேஜ் விஞ்ஞானிகளின் சூப்பர் கண்டுபிடிப்பு - வீடியோ

    கொரோனாவால் நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் வட மாநிலங்களில் ஆம்பன் புயலால் சேதங்கள், பாதிப்புகள், இழப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்க பாலைவனங்களில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. மிகவும் ஆபத்தான இந்த வெட்டுக்கிளிகள் கும்பல் கூடினால் பயிர்கள் அனைத்தும் சர்வ நாசமாகும்.

    எங்க ஊருக்கும் வெட்டுக் கிளிகள் வந்துருச்சு.. பருத்தி செடிகள் மீது படர்ந்திருக்கிறது- வைகோஎங்க ஊருக்கும் வெட்டுக் கிளிகள் வந்துருச்சு.. பருத்தி செடிகள் மீது படர்ந்திருக்கிறது- வைகோ

    பூச்சிக் கொல்லி மருந்து

    பூச்சிக் கொல்லி மருந்து

    இதனால் இந்த வெட்டுக்கிளிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதன் மூலம் விரட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெட்டுக்கிளிகளை எளிதில் விரட்டும் விதமாக சமூகவலைதளங்களில் ஒரு வைரல் வீடியோ உலா வருகிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    பிளாஸ்டிக் வாட்டர்

    பிளாஸ்டிக் வாட்டர்

    அதில் அவர் நவீன பிரச்சினைக்கு நவீன தீர்வுதான் தேவை. வெட்டுக்கிளிகளை விரட்ட உள்ளூர்வாசிகளின் பெஸ்ட் ஐடியா என குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு கம்பத்தின் உச்சியில் ஒரு பக்கம் ஃபேனும் மறுபக்கம் டிரம் பாக்ஸும் உள்ளது. இவை இரண்டும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

    நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    இந்த ஸ்பீக்கர் பாக்ஸை சுற்றி ஒரு துடுப்பு போல் கார்டுபோர்டால் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த கருவி நகருவதற்கு உதவும். காற்று அடித்தால் ஃபேன் சுற்றும், அப்போது அந்த டிரம் பாக்ஸில் இருந்து அதீத சப்தம் எழும். இந்த சப்தத்தால் வெட்டுக்கிளிகள் அச்சம் கொள்ளும். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பாராட்டு

    பாராட்டு

    வெட்டுக்கிளிகளை விரட்ட பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதால் அது பயிர்களுக்கும் ஆபத்து. ஆனால் இது போன்ற யுத்திகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர் இது நல்லத் தீர்வு என கருவி கண்டுபிடித்தவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    v

    English summary
    An instrument was innovated to fight against locust attack. Twitter video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X