சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒரு மாத குழந்தை.. டாக்டர்கள் மகிழ்ச்சி!
சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒரு மாத குழந்தை.. டாக்டர்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாத குழந்தை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளது. ஓமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்
இந்த கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிக அளவில் பாதித்து வருவதுதான் மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாத குழந்தை வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளது.

ஒரு மாத குழந்தை
இந்த குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறி காரணமாக சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனைக்கு வந்தது. அப்போது அந்த குழந்தைக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தைக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. குழந்தைக்கு சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்காக குழந்தைகள் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த குழந்தை மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாக்டர் கூறுவது என்ன?
இது குறித்து இம்மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில், தொற்று நோய் பரவத் தொடங்கிய நாள் முதல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலருக்கும் நாங்கள் கொரோனா சிகிச்சை அளித்து வருகிறோம். கொரோனா பாதித்த 25 முதல் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு சிறப்பாக சிகிச்சை அளித்து அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றுள்ளனர்.

நர்ஸ்கள் சிறப்பாக பங்காற்றினர்
ஆனால் அவற்றில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும். இதன் காரணமாக அந்த குழந்தைக்கு சரியான சிகிச்சை அளித்து விரைவில் குணமடையச் செய்ய வேண்டும் என்பதிலேயே எங்களின் முழு கவனமும் இருந்தது. அதற்கு எங்கள் மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவு குழு மற்றும் நர்ஸ்கள் சிறப்பாக பங்காற்றினர் என்று தெரிவித்தார்.

குழந்தையை முறையாக கவனித்தோம்
இது தொடர்பாக பிரசாந்த் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், கொரோனா பாதித்த ஒரு மாத குழந்தைக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து குணப்படுத்திய டாக்டர் பிரகாஷ் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவு மற்றும் நர்ஸ்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் தனித்துவமானது, ஆனால் எங்களிடம் உள்ள உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதி மற்றும் சரியான சுற்றுச்சூழல் அமைப்பு காரணமாக எங்களால் அந்த குழந்தையை முறையாக கண்காணித்து கோரோனா தொற்றில் இருந்து குணப்படுத்த முடிந்தது' என்று கூறியுள்ளார்.