சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதையும் காசாக்குவோருக்கு மத்தியில் மனிதம் இன்னும் வாழ்கிறது.. அதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி!

Google Oneindia Tamil News

சென்னை: எதையும் காசாக்குவோர் மத்தியில் மனிதநேயத்துடன் மாஸ்க்களை தைத்து அதை இலவசமாக வழங்கும் தையல்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Recommended Video

    இந்திய மக்களுக்கு இலக்கியா தரும் செய்தி

    கொரோனா கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வந்தாலும் வந்தது. இது உலகம் முழுவதும் பரவும் என்பதால் மற்ற நாடுகள் மாஸ்க்குகள், சானிடைசர்களை இருப்பில் வைத்துக் கொண்டன.

    எனினும் உலகம் முழுவதும் இந்த நோய் பரவி தற்போது 19 ஆயிரம் பேர் இறந்துள்ள நிலையில் மாஸ்க்குகள், சானிடைசர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மற்ற நாடுகளுக்கு இறக்குமதி செய்வோர் அதை நிறுத்திக் கொண்டனர்.

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    தமிழகத்தை பொருத்தமட்டில் பல்வேறு தையல் தொழில் நிறுவனங்களில் சேவைமனப்பான்மையுடன் பெண்கள் மாஸ்க்குகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது போல் மஞ்சள், துளசி, வேப்பிலை வைத்து சானிடைசர்கள் செய்வதற்கான செய்முறைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    போர்டு

    போர்டு

    இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு டைலர் இலவசமாக மாஸ்க்களை தைத்து அதை விநியோகித்த சம்பவங்களை நாம் பார்த்தோம். அது போல் பிளவுஸ், சுடிதார் தைக்கும் ஒரு தொழிலாளி இலவசமாக மாஸ்க்களை தைத்துள்ளார். மேலும் தனது கடைக்கு வெளியே மாஸ்க்கள் இலவசமாக கிடைக்கும் என போர்டு வைத்துள்ளார்.

     விஜய்சேதுபதி பேச்சு

    விஜய்சேதுபதி பேச்சு

    எது சந்தையில் டிமான்ட்டாக இருக்கிறதோ அதை தயாரித்து கூடுதல் காசு பார்ப்போர் மத்தியில் இவர்களை போன்றோரால் மனிதம் இன்னும் வாழ்கிறது என்றே சொல்லலாம். இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. மேலும் சிலர் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேச்சை வைரலாகி வருகிறார்கள்.

    மனிதம் குறித்த பேச்சு

    அவர் பேசுகையில் குழந்தைகளுக்கு மனிதத்தையும் மனிதநேயத்தையும் சொல்லிக் கொடுங்கள். மனிதர்களை மதிக்க கற்றுக் கொடுங்கள். கடவுள் மேலே இருக்கிறார். மனுஷன்தான் கீழே இருக்கிறான். எனவே மனுஷனை மனுஷன் தான் காப்பாற்ற வேண்டும். இது மனுஷன் வாழ்வதற்கான இடம், மனுஷன் சகோதரத்துவத்துடன் சந்தோஷமாக அன்பை பரிமாறிக் கொண்டு வாழ வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    English summary
    A photo goes viral after a Tailor gives masks at a free of cost. All are praising for his humanity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X