சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாளுக்கே போரடிச்சிச்சா.. மிக்ஸ் பண்றதாலதான் அது மிக்ஸர்.. அதை போய் தனித்தனியா பிரிச்சுட்டீங்களே!

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு உத்தரவை அடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து வருவதால் என்னென்ன வேண்டாத வேலைகளை செய்யணுமோ அதையெல்லாம் செய்கிறார்கள்.

கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில் சமூக பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பணி செய்வோர் தவிர்த்து வேறு யாரும் வெளியே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வீட்டுக்குள்ளேயே பணி செய்யும் வசதி கொண்டோர் செய்து கொள்ளலாம். அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோர் அந்தந்த நிறுவனங்களே விடுப்பு அளித்துவிட்டது.

வீட்டுக்குள்

வீட்டுக்குள்

நேற்று முன் தினம் இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பொதுவாக இது போல் பல்க்காக லீவு கிடைத்தால் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பீதியால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் சூழல் நிலவியுள்ளது.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

அதனால் நாளுக்கு நாள் இவர்கள் விஞ்ஞானிகள் ஆகி வருகிறார்கள். விடுமுறை காலத்தில் குடும்பத்தினருடன் பொழுதை செலவிட பிரபலங்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் நல்ல புத்தகங்களை படிப்பது, படங்களை பார்ப்பது, ஆன்லைன் மூலம் விரும்பியதை கற்றுக் கொள்வது ஆகியவற்றில் மக்கள் கவனம் செலுத்த பல்வேறு வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் மிக்ஸரில் உள்ள கடலை, ஓம் பொடி, கொள்ளு, அவல், காராபூந்தி, கடலைப் பருப்பு உள்ளிட்டவற்றை தனித்தனியே பிரித்து வைத்திருக்கும்படியாக உள்ளது. வாசனைக்காக வறுத்து சேர்க்கப்பட்ட கறிவேப்பிலையையும் விட்டு வைக்கவில்லை. அதையும் தனியே எடுத்து வைத்துள்ளார்கள்.

Recommended Video

    Let's all stay home and stay safe Surya About Janata Curfew | Janata Curfew
    பொறுமைசாலி

    பொறுமைசாலி

    இந்தளவுக்கா வெட்டியாக இருந்திருப்பார்கள் என எண்ண தோன்றுகிறது. மிக்ஸர் என்றாலே அனைத்தையும் மிக்ஸ் செய்வதுதான் அதை போய் தனித்தனியே பிரிப்பது வேலை இல்லாதோர் செய்யும் வேலையாகும். நல்ல வேளை காபியில் உள்ள பால், காபிதூள், சர்க்கரை ஆகியவற்றை பிரிக்கும் முயற்சியில் நம் மக்கள் ஈடுபடாமல் இருந்தால் சரி! எனிவே மிக்ஸரை பிரித்தவர் மிகவும் பொறுமைசாலி!

    English summary
    A photo shows that some one separates the items which is present in Mixture as offices offers leaves on the account of curfew.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X