சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய கொடியை அவமதித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீதான புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரை சேர்ந்த குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்திருந்தார்.

A Plea seeks to register National Flag dishonour Case against TN BJP leader L Murugan in HC

இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி குகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பாஜக கட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம்.

கேரளா தங்க கடத்தல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடி கைதுகேரளா தங்க கடத்தல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடி கைது

ஆகையால் எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A Plea is seeking to register National Flag dishonour Case against TN BJP leader L Murugan in Madras High Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X