சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐயோ.. ஆளை விடுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே.. சிஏஏ குறித்த கேள்விக்கு மழுப்பிய ஏ.ஆர் ரகுமான்!

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்தும், நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ''எல்லா புகழும் இறைவனுக்கே'' என்று பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    A R Rahman says All grace goes to god when he asked about Citizenship Amendment | Tha Futures event

    சென்னை: சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்தும், நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ''எல்லா புகழும் இறைவனுக்கே'' என்று பதில் அளித்துள்ளார்.

    நாடு முழுக்க சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் ஜேஎன்யூ மாணவர்கள் டெல்லியில் மோசமாக தாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும், சிஏஏ சட்டம் குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    ஏ.ஆர்.ரகுமான் 'தி ஃபியூச்சர்' என்னும் புதிய இசை முயற்சியை தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதுதான் தற்போது பரபரப்பாகி உள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் ஏ. ஆர் ரகுமான் மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.

    ஊருக்கு ஒரு அஸ்வினி இருந்தால்.. நாடு எவ்வளவு சுபிட்சமா இருக்கும்.. சபாஷ் டாக்டர்! ஊருக்கு ஒரு அஸ்வினி இருந்தால்.. நாடு எவ்வளவு சுபிட்சமா இருக்கும்.. சபாஷ் டாக்டர்!

    போர் கருத்து

    போர் கருத்து

    ஏ. ஆர் ரகுமான் தனது பேட்டியில் உலகில் தற்போது நிறைய எதிர்மறை கருத்துக்கள் நிலவி வருகிறது. அது மக்களை பாதிக்கிறது. போர், சண்டை போன்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை இசை காப்பாற்றும்.

    இசை உதவும்

    இசை உதவும்

    குழந்தைகள், சிறுவர்கள் இந்த எதிர்மறை உலகத்தால் பாதிக்க கூடாது. அவர்களுக்கு இசை பெரிய அளவில் உதவும் என்று நம்புகிறேன், என்று ரகுமான் குறிப்பிட்டார். இதையடுத்து நீங்கள் குறிப்பிடும், எதிர்மறை சிந்தனை எது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    எதிர்மறை கருத்துக்கள்

    எதிர்மறை கருத்துக்கள்

    இதற்கு ஏ.ஆர் ரகுமான், ஐயோ ஆளை விடுங்க. நான் உலகம் முழுவதும் இருக்கும் போர், போராட்டத்தை எதிர்மறை கருத்து என்று கூறினேன். அதை போக்குவதே இசையின் வேலை. இசை அதற்காகத்தான் இருக்கிறது. இதற்கு அடுத்து நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று தெரியும். அதற்கு பதில் சொல்ல மாட்டேன், என்றார்.

    பதில் இல்லை

    பதில் இல்லை

    இதையடுத்து நாட்டில் சமீப காலமாக நிலவும் பிரச்சினைகள் குறித்தும், சிஏஏ குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்காத ரகுமான் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

    English summary
    Music Director A R Rahman says All grace goes to god when he asked about Citizenship Amendment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X