சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் அதே தொகுதி.. நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு.. திமுக சார்பாக விருப்பமனு தாக்கல்!

லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு

    சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.

    திமுக ஒரு பக்கம் சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது இல்லாமல் இன்னொரு பக்கம் திமுக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்களையும் பெற்று வருகிறது.

    ஆனால் திமுகவில் இதுவரை முக்கிய நபர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. முதல்முறையாக மத்திய அமைச்சர் ஆ.ராசா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆர்கே நகர் தேர்தல் முடிவு... அதிமுக கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கணும்... டிடிவி தினகரன் அசால்ட்ஆர்கே நகர் தேர்தல் முடிவு... அதிமுக கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கணும்... டிடிவி தினகரன் அசால்ட்

     விருப்பமனு தாக்கல்

    விருப்பமனு தாக்கல்

    நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஆ.ராசா முடிவு செய்துள்ளார். இன்று காலை திமுக அலுவலகம் வந்த அவர் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். ஆ.ராசா ஆதரவாளர்களும் அவர் விருப்பமனு தாக்கல் செய்த போது உடன் இருந்தனர்.

     நீலகிரி தொகுதி

    நீலகிரி தொகுதி

    நீலகிரி தொகுதி தனித் தொகுதியாகும். இது பட்டியலின வேட்பாளர்களுக்கான தொகுதி. அதனால் இந்த தொகுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திமுக இங்கு போட்டியிடும் என்பது இதனால் உறுதியாகி உள்ளது.

     மாற்றினார்

    மாற்றினார்

    முதலில் பெரம்பலூர் தொகுதியில்தான் ஆ.ராசா போட்டியிட்டு வந்தார். 1996-2004 தேர்தல் வரை 4 முறை அங்கு போட்டியிட்டார். அதில் 3 முறை வெற்றிபெற்றார். அதன்பின் நீலகிரிக்கு மாறினார்.

     மீண்டும் போட்டி

    மீண்டும் போட்டி

    2009ல் நீலகிரியில் போட்டியிட்டு வென்றார். அதன்பின்தான் மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ஆனார். 2014ல் இதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர்கள் எஸ். கோபால கிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் இவர் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

    English summary
    Former minister A Raja decides to contest in Nilgiris Lok Sabha constituency for DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X