சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஞானம் மிக்க ராசா.. சரியான நேரத்தில், சரியான ஆக்‌ஷன்.. லட்டு பதவி தந்து கரெக்டாக கவுரப்படுத்திய திமுக

துணை பொதுச்செயலாளராக ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்து குவிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் திமுகவின் மூத்த தலைவர் ஆ.ராசா! ஞானம் மிக்க ராசாவுக்கு இந்த பதவி மிக மிக பொருத்தமானது என்று உடன்பிறப்புகள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

தலித் சமூகத்தை சேர்ந்த ஆ.ராசா - மிக சிறந்த அறிவாளி.. படிப்பாளி.. மறைந்த தலைவர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமானவர்.. ராசாவின் தோள் மீது கலைஞர் கை போட்டு கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வீடியோக்களும், போட்டோக்களும் சோஷியல் மீடியாவை அலங்கரித்து வருவதே இதற்கு சாட்சி.

அறிவாசான் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்... அந்த கொள்கைகளை இப்போதுவரை மேடைக்கு மேடை பேசி மாணவர்கள், இளைஞர்களின் மனசில் அறிவுபால் ஊட்டி வருபவர்.. அண்ணாவின் வழியில் நாடாளுமன்றத்தில் அறிவுப்பூர்வமாக பேசுபவர்.. இப்படிப்பட்ட பல சிறப்புகளை பெற்ற ஆ.ராசாவுக்கு இன்று துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

தைலாபுரம் தோட்டத்தில் கறி விருந்து எப்போ.. கெமிஸ்ட்ரி அப்படியே இருக்கு.. காத்திருக்கும் அதிமுக!?தைலாபுரம் தோட்டத்தில் கறி விருந்து எப்போ.. கெமிஸ்ட்ரி அப்படியே இருக்கு.. காத்திருக்கும் அதிமுக!?

 பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

உண்மையை சொல்லபோனால், பொதுச்செயலாளர் பதவிக்கே இவரது பெயர் அடிபட்டது.. அந்த அளவுக்கு திமுகவின் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார். இந்த துணை பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு வழங்கியது மிக மிக பொருத்தமானதாகவே பார்க்கப்படுகிறது.. அதற்கு நிறைய காரணங்களும் உள்ளன!

ஸ்டாலின்

ஸ்டாலின்

முதலாவதாக, திமுக தலைவரை எந்த விதத்திலும் மனம் புண்படும்படும்படியும், நோகாதபடியும் பேசாதவர்... ஸ்டாலின் மனம் வருந்தும்படி எதையும் செய்யாதவர்.. பல மூத்த தலைவர்கள், ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருந்தாலும், இப்போது வரை தன் கட்சி தலைவரை கட்டி அணைத்து மகிழும் அளவுக்கு பாசத்தை அவர் மீது வைத்துள்ளவர். அதுமட்டுமல்ல, திமுக உயர் மட்ட தலைவர்கள் முதல் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் வரை எல்லாரையுமே மரியாதையாக அரவணைத்து செல்லக்கூடியவர்.

 2ஜி வழக்கு

2ஜி வழக்கு

இரண்டாவதாக, இவரிடம் உள்ள அறிவுக்கூர்மை.... குறிப்பாக 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டபோது, மொத்த திமுகவுக்கும் களங்கம் என்றேதான் சொல்லப்பட்டது.. ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வற்புறுத்தினர்... அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசில் இருந்தும் திமுக மீது கடுமையான அழுத்தம் தரப்பட்டது.. ஆனால், பாட்டியாலா கோர்ட்டில் தனக்காக தானே வாதாடி, ஒட்டுமொத்த அரசு அமைப்புகளும் தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளை, தூள் தூளாக்கினார்.. "அதுவரை எனக்கு எதிராக திரும்பியிருந்த நீதிமன்ற தராசு முள், என் பக்கமாக திரும்பியது அப்போதிருந்துதான்" என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் ஆ.ராசா. இதற்கு பிறகுதான் மிகுந்த மதிப்புக்குரிய தலைவராக உருவெடுத்தார். அதனால், 2ஜி என்ற விவகாரத்தை எந்த எதிர்க்கட்சியும் ஒரு காரணமாக ராசா மீது ஒருபோதும் இனி திணிக்க முடியாது.

எளிமை

எளிமை

மூன்றாவதாக, இவரிடம் உள்ள எளிமை.. சென்னையில் எந்த திமுக கூட்டம் நடந்தாலும் போதும், அந்த கூட்டங்களுக்கு வரும் திமுக பிரமுகர்கள் அத்தனை பேரும், ராசா வீட்டுக்கு போய்வருவார்கள்.. எல்லாருக்குமே வயிறாற சாப்பாடு போட்டு அனுப்புவார்.. அதனால் திமுக தரப்பில் ராசா மீது ஒரு தனி பாசம் உள்ளது.. இதுதான் தற்போதைய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.. ஒரு கட்சியில் அதிருப்திக்கு உட்படாத தலைவர்கள் வெகு சிலரே.. எல்லா நிர்வாகிகளுக்கும் பிடித்த மாதிரியாக இருப்பது என்பது வியப்புக்குரியதுதான்!

விசிக

விசிக

நான்காவதாக, தலித் ஓட்டுக்களை அப்படியே திமுக பக்கம் திருப்பும் சக்தி படைத்தவர்.. தலித்துக்களுக்கு திமுக முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கி வருபவர்.. என்னதான் கூட்டணியில் விசிக இருந்தாலும், நாளை அதன் நிலைப்பாடு என்ன? அல்லது கூட்டணியிலேயே இருந்தாலும் மொத்த தலித்துக்களும் விசிகவுக்கே வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்.. அந்த வகையில், வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற உந்துதலாக இருப்பது ராசாவின் செல்வாக்குதான்.. தன் தொகுதிகளுக்குட்பட்ட எம்எல்ஏக்களுக்கு தேர்தல் செலவு செய்யும் சக்தியும் ராசாவுக்கு இருக்கிறது. அதனால் ராசா இருக்கும்வரை தலித் ஓட்டுக்களை பற்றி திமுக கவலையே கொள்ள தேவையில்லை என்ற நம்பிக்கை உள்ளது.

பதிலடி

பதிலடி

ஐந்தாவதாக, இவரது பேச்சு திறமை.. எத்தனையோ தலைவர்கள் திமுகவில் பேச்சாளர்களாக உள்ளனர்... ஆனால், ராசா பேச்சு சற்று வித்தியாசமாகவும், புள்ளி விவர தரவுகளுடனும் இருக்கும்.. திமுகவில் எப்போதெல்லாம் மிகப்பெரிய சர்ச்சைகள் உருவாகிறதோ அப்போதெல்லாம் அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி பதிலடி தருவது ராசாதான்.. சில தினங்களுக்கு முன்பு கடவுள் முருகன் குறித்த சர்ச்சை வெடித்தது. அப்போரு, "திமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு கோடி தொண்டர்கள் இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள்... அவர்களின் நம்பிக்கையை புண்படுத்த மாட்டோம் என்று உங்களுடைய அமைப்பு செயலாளர் கூறுகிறார். இதற்கு முன்பு திமுக இந்த நிலைப்பாட்டை எடுத்ததில்லையே? என்று ஒரு டிவியில் இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

 இந்துக்கள்

இந்துக்கள்

அதற்கு, "அவர் சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லையே.. நான் யார்? இந்து தானே.. சட்டப்படி திமுகவில் ஒரு கோடி பேர் இந்துக்களாகத் தானே இருக்கிறார்கள்... அப்படிதானே அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்கும் நாங்கள், எங்களுடைய உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்கும் போது தடையாக இந்துத்துவா இருக்கிறது என்றால், அதனை நாங்கள் எதிர்க்கிறோம். அவ்வளவு தான்" என்று சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

அருந்ததியர்

அருந்ததியர்

"அருந்ததியர் வீட்டில் இருக்கும் நபர்களை பாஜகவில் இருக்கும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள், தங்கள் வீட்டிற்குள் அனுமதித்து அவர்களுக்கு பெண் கொடுத்து சமநிலைக்கு கொண்டுவர தயாராக இருக்கிறார்களா? சாதி ஒழிந்துவிட்டதா? அப்போ எங்களை கேட்காமல் இந்து என்று முத்திரை குத்துவதற்கு நீங்கள் யார்? சாதியை வைத்து உரிமைகளை மறுத்தது நீங்கள்தான்" என்று ஆணித்தரமாக சொல்லவும், கேட்கவும் ராசாவை தவிர வேறு யாராலும் முடியாது.

சபாஷ்

சபாஷ்

இப்படி திமுகவுக்கும், தமிழகத்துக்கும், திராவிடத்துக்கும் ஒரு பாலமாகவே ஆ. ராசா எக்காலத்திலும் திகழ்ந்து வருகிறார்.. அவமானங்களுக்கு அசராத இந்த ராசாவுக்கு இப்பதவி கிடைத்துள்ளது, மிக சரியானதும் பொருத்தமானதும்கூட!

English summary
A Raja is deserved to the Deputy General secretary post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X