சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவிலுக்கு வராதேன்னா அது பக்தியா.. ராசா கேள்வி.. "இதை முதலில் துர்கா ஸ்டாலினிடம் கேட்டீங்களா?"!

இந்து கடவுள்கள் குறித்த திமுக எம்பி ஆ.ராசா ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா?" என்று ஒரு கேள்வியை ஆ.ராசா ட்விட்டரில் கேட்க அதற்கு ஏகப்பட்டோர் பொங்கி பதிலளித்து வருகின்றனர். ""சார் , கோவில் மட்டும் சொல்றீங்க. ஏன் சர்ச் , மசூதி எல்லாம் சேக்க மாட்றீங்க? இந்த கேள்வியை துர்கா ஸ்டாலினிடம் கேட்டீங்களா? திமுகவுக்கு இந்த ஓட்டு விழவே கூடாதா" என்று ஆ.ராசாவுக்கு பதில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

Recommended Video

    கொரோனா வைரஸ்.. மதுரை போலீஸ் எடுத்த முக்கிய முடிவு.. பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பற்றின கலக்கம் அதிகரித்து வருகிறது.. இதன் அதிகபட்ச பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டது.

    அதனால்தான் பள்ளிகள், தியேட்டர்கள், திருமணங்கள், சுற்றுலா பொழுதுபோக்கு இடங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேவஸ்தானம்

    தேவஸ்தானம்

    அந்த வகையில், சபரிமலையில் மார்ச் 14-18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.. இதேபோல, திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானமும் இரும்பல், தும்பல், காய்ச்சல் ஏதேனும் இருந்தால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என அறிவித்துள்ளது.

    கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களை கோயில்களுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தல் அதிகமாக இருப்பதால், ஏராளமான கோயில்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. பழனி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதேபோல் மெக்கா புனித தலம், இயேசு பிறந்ததாக கருதப்படும் தேவாலயங்கள் கூட வெறிச்சோடிப்போயுள்ளன.

    ஆ.ராசா

    ஆ.ராசா

    இந்நிலையில், திமுக எம்பியும், மூத்த தலைவருமான ஆ.ராசா இதை பற்றி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா?" என்று பதிவிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.

    மசூதிகள், சர்ச்கள்

    மசூதிகள், சர்ச்கள்

    ஆனால் இதற்கு ஏகப்பட்ட ட்விட்டர்வாசிகள் பதிலளித்து வருகின்றனர்.. "சார் , கோவில மட்டும் சொல்றீங்க. ஏன் சர்ச் ,மசூதி எல்லாம் சேக்க மாட்றீங்க? உங்க பகுத்தறிவு இந்துக்களிடம் மட்டுமே ஏன் பல் இளிக்கிறது! மக்கள் உஷாராகிட்டாங்க , ஆல்ரெடி #இந்து_விரோதி_திமுக முத்திரை விழுந்துடுச்சு. பாத்துக்கங்க" என்றும் "போன வாரம் சர்ச்க்கும் மசூதிக்கும் யாரும் வர வேணாம் னு சொன்னாங்களே?" என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    துர்கா

    துர்கா

    ஆ.ராசாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை... திமுகவுக்கு இந்து ஓட்டுகள் விழக்கூடாது என்று கங்கணம் கட்டி வேலை பார்க்கிறாரா, இந்த கேள்வியை முதலில் துர்கா ஸ்டாலினிடம் கேட்டாரா என்ற ட்விட்டர்வாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த ட்வீட் பதிவிட்டதால், தேவையில்லாத அதிருப்தியை திமுக தரப்பில் ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    dmk mp a raja tweet about hindu gods and corona virus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X