India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மாட்டுக்கறி".. அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால்.. "இதை" சொல்லுங்க பார்ப்போம்.. தெறிக்க விட்ட ஆ.ராசா

Google Oneindia Tamil News

சென்னை: திராவிட மாடல் என்பது என்ன? ஆரிய மாடல் என்றால் என்ன? என்பது குறித்து, திமுக எம்பி ஆ ராசா விளக்கம் தந்துள்ளார்..

முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 99வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா கூட்டம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில், நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில், எம்பி ஆ.ராசா உரையாற்றினார்.

கர்நாடகாவில் கோயில் நிதி “ரூ.20 கோடி” சுருட்டிய 5 பூசாரிகள்.. போலி இணையதளம் நடத்தி ”சதுரங்க வேட்டை” கர்நாடகாவில் கோயில் நிதி “ரூ.20 கோடி” சுருட்டிய 5 பூசாரிகள்.. போலி இணையதளம் நடத்தி ”சதுரங்க வேட்டை”

அந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.. கருணாநிதியின் புகழை பேசிய ஆ.ராசா, எது திராவிட மாடல் என்பதையும் விழாவில் வலியுறுத்தினார்.. அதன் சுருக்கம் இதுதான்:

 இந்துத்துவா

இந்துத்துவா

5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்.. 3 முறை மத்திய அமைச்சராக இருக்கிறேன்.. இந்துத்துவாவை கடைப்பிடிக்ககூடிய பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக இருந்திருக்கிறார்... அன்றைக்கு பாஜகவுக்கு ஓரளவு கணிசமான எண்ணிக்கையில், பாஜகவுக்கு உறுப்பினர்கள் இருந்தார்கள்... ஆனால், அப்போதெல்லாம் அருவெறுப்பான கூச்சல் இல்லை.. நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் வந்தால், எல்லாரும் எழுந்து நின்று வணங்குவோம்.. அவ்வளவுதான்..

 ஜெய்ஸ்ரீராம்

ஜெய்ஸ்ரீராம்

ஆனால், இந்த முறை நாடாளுமன்றத்திற்கு நாங்கள் போகும்போது, நாங்களே வியப்படையும் அளவுக்கு, எரிச்சலடையும் அளவுக்கு சபாநாயகர் உட்காரும்போது "பாரத்மாதா கி ஜி என்று சத்தம் போட்டாங்க.. அப்பறம், ஜெய்ஸ்ரீராம் என்று சத்தம் போட்டாங்க.. நாங்க 2 நாள் பார்த்தோம்.. உடனே பெரியார் வாழ்க என்று சத்தம் போட்டோம்.. இந்த திமுக 50 வருட காலம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள்..

 பிராமணர்கள்

பிராமணர்கள்

ஆந்திராவில் எம்பிக்களுக்கு நாயுடு என்றும், ரெட்டி என்றும் பட்டம் உண்டு.. கேரளாவில் நாயர் என்று பட்டம்.. ஒரிசாவில் இருப்பவர்களுக்கு பாண்டே என்று பட்டம்.. பானர்ஜி, கவுடா, அகர்வால் என்று பட்டங்கள் உள்ளன.. வடநாட்டில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் சாதிகளில் பெயர் பட்டம் உள்ளதே.. நாங்க 40 பேர் இருக்கோமே.. எங்களுக்கு ஏதாவது பட்டம் இருக்கா? ஏன் இல்லை? இதுதான் திராவிட மாடல்.. இதுதான் பெரியார். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்தபோதெல்லாம், இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற உறுதுணையாக இருந்தது திமுகதான்..

கிரிக்கெட்

கிரிக்கெட்

1932 வரைக்கும் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும்.. சமஸ்கிருதத்துக்கும் எம்பிபிஎஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம்? அதான் இப்போ நீட்.. அந்த நீட் தேர்வில் என்ன கேள்வி கேக்குறாங்க.. கவாஸ்கர் இதுவரை அடித்த மொத்த ரன்கள் எவ்வளவு? கவாஸ்கர் எடுத்த மொத்த ரன்னுக்கும், நாளைக்கு நான் போட போற ஊசிக்கும் என்ன சம்பந்தம்? அப்படின்னா கிரிக்கெட்டை பார்ப்பது யார்? கிரிக்கெட் டீமில் இருப்பவர்கள் யார்? இன்னைக்கு இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் டீமில் ஒரே ஒரு வன்னியர் உண்டா? ஒரே ஒரு நாடார் உண்டா? முக்குலத்தோர் உண்டா? ஒரு கவுண்டர் உண்டா? ஒரு பறையர் உண்டா? ஒரு பள்ளர் உண்டா? ஆனால் கோப்பையை வாங்கிட்டு வர்றவனை, நாம டிவியில் பார்த்துட்டு இருப்போம்.. இதுதான் ஆரிய மாடல்..

 திராவிட மாடல்

திராவிட மாடல்

இது எல்லாருக்கும் போய் சேர வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.. அனிதாவுக்கு என்ன நிலைமை? ஏன் நீட் கிடைக்கல? நீட் என்ற நுழைவுதேர்வு வாயிலாக, சாதாரண தாழ்த்தப்பட்ட மக்களும், சாமான்ய மனிதனும், உயர்கல்விக்கு போகக்கூடாது என்ற விஷயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள்... இது ஆரிய மாடல்.. இதை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, அதற்கான சட்டத்தை நிறைவேற்றி, கையெழுத்து போடாமல் இருந்த கவர்னரை, கையெழுத்து போட வைத்தாரே, இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர், அதுதான் திராவிட மாடல்

 ஜனநாயகம்

ஜனநாயகம்

அன்று இந்திரா காந்திக்கு துணையாக இருந்ததும் இந்த கட்சிதான்.. அதே இந்திராவால் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றதும், அதை கண்டித்ததும் இதே திமுகதான்.. 5 வயதிலேயே ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வை, அப்பதான் யோக்கியமாக இருப்பாள், வயசுக்கு வந்ததும், இன்னொரு ஆணை பார்த்துடுவாள், மனதால் அவனை நினைத்துவிடுவாள்.. கற்பு போயிடும் என்று சொல்வது ஆரிய மாடல்..

 மாட்டுக்கறி

மாட்டுக்கறி

ஆனால், அந்த பெண் வயதுக்கு வந்ததும், நன்கு படிக்க வைத்து, 18 வயதுக்கு மேல் திருமணம் செய்து வை என்று சொன்ன பெரியார் இயக்கத்தில், ஒரு ஆன்மீகவாதி இருப்பதிலே தவறில்லை என்ற காரணத்தினால்தான், சேகர்பாபுவை நாங்கள் வாழ்த்துகிறோம்.. மாட்டுக்கறி சாப்பிடற எல்லா நாட்டு பிரதமரையும் அவர் கட்டிப்பிடிக்கிறார்.. இது இப்போது என்றில்லை.. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பிராணமர்களே இதை அன்று செய்தார்கள்..

 மாட்டுக்கறிக்கு தடை

மாட்டுக்கறிக்கு தடை

ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் குடியரசு தலைவர்.. சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்.. சிறை சென்றவர்.. ஆனால், அவர்தான், இந்தோனேஷியாவின் ஜனாதிபதி சுகர்னோ, இந்தியாவுக்கு வந்தபோது, அவரை குடியரசு தலைவர் மாளிகையில் தங்க வைக்க முடியாதுன்னு மறுத்து, பிரதமர் நேருவிடம் சொல்லிவிட்டார்.. அவர் இன்னொரு நாட்டு தலைவர்.. எப்படி ஹோட்டலில் தங்க வைக்க முடியும் என்று நேரு கேள்வி கேட்டார்.. அதற்கு ராஜேந்திர பிரசாத், சுகர்னோ மாட்டுக்கறி சாப்பிடுபவர்.. அவரை என் மாளிகையில் தங்க வைக்க இடம் கொடுக்க மாட்டேன்.. அதை என் இந்து மத ஆச்சாரம் ஒப்புக் கொள்ளாது என்கிறார்.

சுகர்னோ

சுகர்னோ

உடனே நேரு, "நீங்க இப்போ சொன்னதை, அப்படியே நாடாளுமன்றத்தில் சொல்லட்டுமா?" என்று கேட்கிறார்.. இதற்கு பிறகுதான் ராஜேந்திர பிரசாத் இணங்கினார்.. ஆனால், சுகர்னோ, இங்கு வந்து தங்கியபோது மாட்டுக்கறியே சாப்பிடவில்லை.. ஆனாலும், அவர் தங்கியிருந்த அந்த முழு மாளிகையையும், 20 ஐயர்களை வைத்து, திரும்பவும் கும்பாபிஷேகம் மாதிரி செய்து, அந்த தீட்டை துடைத்தபிறகுதான், மாளிகைக்குள் வந்தார்.. அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்ததுதான், இன்றைக்கு அப்பட்டமாக இவர்களிடம் தெரிகிறது..

 மலைவாழ் இனம்

மலைவாழ் இனம்

நீலகிரி மாவட்டத்தில், ஒரு மலைவாழ் மக்கள் இருக்காங்க.. ஒரு பெண் - மாப்பிள்ளையை அவங்க பார்த்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணை அந்த வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.. உடலுறவு உட்பட 60 நாட்கள் அந்த பெண் அவனோடு இருக்கலாம்.. பிடிக்கலேன்னா விலகிடுவாங்க..

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

பிறகு, இந்த பெண்ணையும் வேறு ஒருவர் திருமணம் செய்து கொள்வார்.. அந்த ஆணையும் வேறு ஒரு பெண் திருமணம் செய்து கொள்வார்.. இன்று இன்றைக்கும் அங்குள்ள நடைமுறை.. இது அவங்க கலாச்சாரம்.. அந்த தொகுதியின் எம்பி நான்.. ஆர்எஸ்எஸ்ஸுக்கு தைரியம் இருக்குமானால், மோகன் பகவத்துக்கு தைரியம் இருக்குமானால், மோடிக்கு தைரியம் இருக்குமானால், அமித்ஷாவுக்கு தைரியம் இருக்குமானால், முஸ்லிம்களை தவிர்த்து, மாட்டுக்கறி சாப்பிடுகின்ற யாரும் இந்துக்கள் இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்..' என்றார்.

English summary
a rasa praised, dmks diravida model and chief minister mk stalin in chennai ஆ ராசா திராவிட மாடல் குறித்து, கருணாநிதி பிறந்தநாள் விழாவில் உரையாற்றினார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X