சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா... வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா.. தேவையில்லாமல் ஓடி போலீஸிடம் சிக்கிய பாஸ்கர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொள்ளையன் ஒருவர் தானாக வந்து போலீஸிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

தேனியை சேர்ந்தவர் செல்வம். இவர் நவரத்தின கற்கள் விற்பதற்காக சென்னைக்கு வந்தார். செல்வத்திடம் நவரத்தின கற்கள் வாங்குவதற்காக பாஸ்கர் தனது நண்பர்களுடன் சென்றார்.

தி.நகரில் உள்ள தங்கும் விடுதியில் இருதரப்பினருக்கும் இடையே பேரம் நடந்து விலை முடிவுக்கு வந்தது. செல்வம் கழிப்பறைக்கு சென்ற போது நவரத்தின கற்களை எடுத்து கொண்டு பாஸ்கர் தரப்பு தப்பி ஓடியது.

கேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ! கேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ!

பயணிகள்

பயணிகள்

தப்பியோடிய பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நவரத்தின கற்களுடன் திநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டத்துடன் பாஸ்கர் கலந்தார்.

போலீஸ்

போலீஸ்

அப்போது அங்கு காவலர்கள் ரோந்து பணிக்காக வந்தனர். இதை பார்த்த பாஸ்கர் தம்மை பிடிக்கத்தான் போலீஸார் வந்துள்ளதாக கருதி ஓட்டம் பிடித்தார்.

போலீஸ் நிலையம்

போலீஸ் நிலையம்

இதை பார்த்த காவலர்கள் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து பாஸ்கரை விரட்டி பிடித்தனர். அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது, நவரத்தின கற்களை திருடி சென்றவர்களுள் பாஸ்கரும் ஒருவர் என்பது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

வடிவேலு

வடிவேலு

ஒரு படத்தில் வடிவேலுவும் பார்த்திபனும் பேசி கொண்டிருக்கும் போது துபாயில் நீ கழிப்பறைதானே கழுவுகிறாய் என பார்த்திபன் கேட்பார். அதற்கு உனக்கு எப்படிப்பா தெரியும் என வடிவேலு கேட்பார். அதற்கு பார்த்திபன் உண்மையிலேயே நீ கழிவறைதான் சுத்தம் செய்கிறாயா.

பாஸ்கர் நிலை

பாஸ்கர் நிலை

ஏதோ நான் குத்து மதிப்பாதான் கேட்டேன் என பார்த்திபன் சொல்வார். அதற்கு வடிவேலு நீ குத்துமதிப்பாதான் கேட்டியா, நானாதான் உளறிட்டேனா என பாவமாக கேட்பார். இதுக்கு பேர்தான் போட்டு வாங்குறது என பார்த்திபன் சொல்வார். இந்த காமெடி போல் இருக்கிறது இந்த கொள்ளையன் பாஸ்கரின் நிலை.

English summary
A Robberer was arrested voluntarily in Chennai by mistakenly thinking patrol police was there to arrest him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X