சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புனித பூமி இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது - ஹைகோர்ட் நீதிபதிகள்

புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. துரதிஷ்டவசமானது சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை என நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலார்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கின்போது, மஹாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய மாநில மத்திய அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த முறை உத்தரவிட்டிருந்தனர்.

A sexual assault takes place every 15 minutes in Holy Land India says High Court Judges

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போ மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இன்றைய செய்திதாள்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார்.

 குடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள் குடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள்

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் இல்லை என்றும், உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

A sexual assault takes place every 15 minutes in Holy Land India says High Court Judges

புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை என நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இது துரதிஷ்டவசமானது என்றும், குறிப்பாக இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலார்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை நீதிபதிகள் வெளிப்படுத்தினர். திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ ஜி விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

English summary
Chennai High Court judges have lamented that in India, which is considered the Holy Land, it has become a land of sexual violence as it happens as a 15 minute sexual assault. Judges have also expressed concern that there is no protection for female migrant workers in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X